இந்த மாநிலம் கடும் சுயநலவாதிகளின் கையில் சிக்கிவிட்டது
அந்த வில்சன் ஈழதமிழனுக்காக தீ குளித்திருக்க வேண்டும், இல்லையேல் பாபர் பசூதிக்காக தன்னை கொளுத்தியிருக்க வேண்டும்
அப்பாவி பாகிஸ்தானை தாக்காதே என்றோ, நீட் தேர்வை ரத்து செய் என்றோ, வங்க தேச மக்களை உள்ளே விடு என்றோ சொல்லி சுட்டுகொண்டு செத்திருந்தால் இந்நேரம் அக்குடும்பம் கோடீஸ்வர குடும்பமாக மாறியிருக்கும்
இந்தி படிக்காதே என சுட்டு செத்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு
அதுவும் பார்பண அதிகார நாட்டில் சிறுபான்மையினரான நான் வாழமுடியாது என சொல்லிவிட்டு அவரே அவரை சுட்டிருந்தால் இந்நேரம் அவர் வீடுமுழுக்க பணமாக கொட்டி அவரை தியாகி ஆக்கியிருப்பார்கள்
ஆனால் அவர் இரு தேசவிரோதிகளை பிடிக்க தன் உயிரை கொடுத்ததால் எல்லையில் சாகும் வீரனின் பெரும் தியாகம் சாதரண சாவாக கருதபடுவது போல் அதுவும் கடந்தாயிற்று
தமிழ்நாடு போலி அரசியல்வாதிகள், சுயநல மீடியாக்கள், வறட்டு பைத்தியகார தலைவர்கள், கொடிய பிரிவினைவாத சித்தாந்த வாதிகள் கையில் எவ்வளவு வலுவாக சிக்கியிருக்கின்றது என்பதை நாமெல்லாம் அறிய மகா முக்கிய தருணமிது
நாகர்கோவிலுக்கு ஓடி சென்று வென்ற அந்த வசந்தகுமாரை கூட காணவில்லை
திருமா, சிறுபான்மை காவலன் ஸ்டாலின், இன்னும் சமூகநீதி காக்க வந்த கணவான்கள் ஒருவனையும் காணவில்லை
கன்னியாகுமரி கடலலைகளோடு சேர்ந்து ஆரல்வாய்மொழி பக்கம் “ஓஓ..”வென வீசும் காற்றோடு சேர்ந்து நாம் அவனுக்காகவும் இந்த மாநிலம் கடும் சுயநலவாதிகளின் கையில் சிக்கிவிட்டதையும் எண்ணி அழுது கொண்டிருக்கின்றோம்