இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு
இந்த முகநூல் நமக்கு அலாவுதீன் கையில் கிடைத்த விளக்கு போல் ஆகிவிட்டது, எதை நினைத்து இந்த விளக்கை தொட்டாலும் உடனே ஏதாவது ஒரு பூதம் வந்து வரம் கொடுக்கின்றது
நல்ல விளக்காக இருக்கும் போலிருக்கின்றது
அப்படி இந்த யோகியின் சுயசரிதை புத்தகமும் கிடைத்துவிட்டது, பெரிய புத்தகம் கிட்டதட்ட 1200 பக்கங்களை கொண்டிருக்கின்றது , நேற்றுபடிக்க தொடங்கினேன் பாதி முடித்துவிட்டேன், விரைவில் முடித்துவிடலாம்
நாம் தமிழில் வாசிக்க விரும்புவர்கள், தொழில்முறை புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிக்கலாம் ஆனால் மனதை தொடவேண்டிய விஷயங்கள் தமிழில் வாசிப்பதுதான் பரமானந்தம், வேகமான வாசிப்பு, அதனூடாக விரியும் கற்பனை, எங்கிருந்தோ அதில் வந்து கலக்கும் விஷயங்கள் எல்லாம் வேறு மொழியில் கிடைக்காது
அதனால் ஒரு நண்ப பூதம் தமிழாக்கத்தை கொடுத்தது.
நிச்சயம் ஆச்சரியங்களும், எளிய தத்துவங்களும், ஞானமும் உண்மை போதனையும் நிரம்பிய புத்தகம் அது, படிக்க படிக்க ஆச்சரியம், வியப்பு
பால் பிராண்டன் என்ற வெள்ளையன் உலகெல்லாம் ஞானம் தேடி அலைந்தானாம் எகிப்து பிரமீடு , லெப்னான் குகைகள், வாடிகன் ஆலயம் , சீன மடாலயம், இமயமலை என எங்கெல்லாமோ அலைந்து இறுதியில் நம் திருவண்ணாமலையில் ஞானம் அடைந்தார், சுவாரஸ்ய வரலாறு அது
அவரை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு நம்மை அசரடிக்கின்றது புத்தகம்
இன்னும் முழுக்க முடிக்கவில்லை எனினும் புத்தகத்தில் இருந்து இப்போதைக்கு சொல்லும் விஷயம் இதுதான்
படத்தின் சில காட்சிகளை அப்படியே பாபா படத்தில் வைத்திருக்கின்றார்கள், ஆக ரஜினிகாந்த் அந்த புத்தகத்தை மிக நன்றாக படித்திருக்கின்றார் என்பது புரிகின்றது
அவர் அடிக்கடி இமயமலை செல்ல அந்த யோகியின் வாழ்வும் காரணமாக இருக்கலாம்
