இந்நூற்றாண்டின் மாபெரும் காமெடி

போரஸ் மன்னனும் அலெக்ஸாண்டரும் சமாதானமாய் போனது முதல் சோமநாதபுரியினை கஜினி நொறுக்கியது வரை ஆதாரம் என்ன?

மாலிக்காபூர் மதுரையினை சூறையாடியதை ரெக்கார்ட் செய்தது எவன்?

நாதிர்ஷாவும், தைமூரும் டெல்லியினை நொறுக்கி போட்டபொழுது ஆதாரம் என எதை பதிவு செய்தார்கள்

அதெல்லாம் ஆதாரம் என இல்லாபொழுது ராமர் கோவிலுக்கு ஆதாரம் கொடுங்கள் கேட்பது என்ன வகையோ தெரியவில்லை

ஆண்டாண்டு காலம் அங்கு வழிபாடு இருந்திருக்கின்றது, பாபர் மசூதி கட்டபட்டபின்பும், அதற்கு முன்பும்
வழிபட்டிருக்கின்றார்கள்,

1986ல் பூட்டை உடைத்தும் அதை செய்தார்கள்

1991ல் அதை இடித்தும் வழிபட முயன்றார்கள்

ராமர் அங்கு பிறந்தார் என்பதும் அங்கு ஆலயம் கட்டி வழிபட்டதும் பன்னெடுங்கால நம்பிக்கையின் தொடர்ச்சியும் வழிபாடுமாகும்

அந்த ஆலயம் இடிபட்டு இடிபாடுகளாய் கிடந்தபொழுதும் வழிபட்டிருக்கின்றார்கள், புத்த எழுச்சி, சமண எழுச்சி இஸ்லாமிய எழுச்சி என வரும்பொழுதெல்லாம் அந்த ஆலயம் நொறுக்கபடுவதும் மறுகட்டுமானம் செய்யபடுவதும் தொடர்ந்திருக்கின்றது

ஜெருசலேமில் சாலமோன் அரசன் கோவில் கட்டினான் இடித்தார்கள், பின் ஏரோது கட்டினான் இடித்தார்கள் ஆனால் இது எங்கள் ஜென்மபூமி என இஸ்ரேலியர் தொடர்ந்து வருகின்றார்கள் அல்லவா?

அப்படித்தான் இங்கும் ஆண்டாண்டு காலம் ஆலயம் பல இடையூறுகளுக்கு பின் மீண்டும் மீண்டும் பல வடிங்களில் எழுவதும் இடிபடுவதும் பின் எழுவதுமாய் இருந்தது

நாம் காணபோகும் ஆலயவடிவம் இனி கட்டடபட போகும் பெரும் வடிவம்

அப்படித்தான் பல வடிவங்களாக அது மாறி மாறி அந்த இடத்தில் எழுவதும் மறைவதும் பின் எழுவதுமாக இருந்திருக்கின்றது

இன்று இஸ்ரேலில் அழும் சுவர் என ஒரு சுவர் எஞ்சியிருக்கின்றது, அவனிடம் இங்கு சாலமோன் அரசனின் ஆலயம் இருந்த ஆதாரம் எங்கே என கேட்டால் கேட்பவனின் சாம்பல் கூட மிஞ்சாது..

இதோ இன்று 550ம் பிறந்தநாள் காணும் குருநாணக் இருந்த ஆதாரம் எங்கே? இந்த படம் வெறும் வரைபடம், எமக்கு உண்மைபடமும் ஆதாரமும் வேண்டும் என்றால் சீக்கியின் வாள் ரத்தம் பார்க்காமல் விடாது

சரி, ராமர் பிறந்த இடம் என அவர்கள் நம்புகின்றார்கள் அது அவர்கள் நம்பிக்கை

70 ஆண்டுக்கு முந்தைய பஞ்சமி நிலத்தின் மூலபத்திரத்தை கூட கொடுக்கமுடியாத கோஷ்டி, ஒரு மிசா கைதுக்கு ஆதாரம் கொடுக்கமுடியா கோஷ்டி, பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமபிரானுக்கு ஆதாரம் கொடு என்பதுதான் இந்நூற்றாண்டின் மாபெரும் காமெடி