இனியாவது மார்க் திருந்தட்டும்
பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதிற்கு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார், ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் : செய்தி
அடேய் மார்க், எப்படி அசிங்கபட்டீர் பார்த்தீரா?
இங்கு மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம், அக்கவுண்டை கொடுத்துவிட்டு நடையினை கட்டும்
பயணாளர் கணக்கை வெளியிட்ட சர்ச்சை, ஒரே நாளில் 8 சதவீதம் சரிவினை கண்டது பேஸ்புக் : செய்தி
இந்த மார்க் என்பவரின் முகநூல் பயணாளர் தகவல்களை ரகசியமாக வெளியிட்டது என்பதில் இரு விஷயங்களில் வசமாக சிக்கியுள்ளார் மார்க்
முதலாவது பயணாளர் ரகசியங்களை காப்ப்பாற்றாமல் அதனை வெளியிட்டிருக்கின்றார் என்ற நம்பகதன்மை பறிபோய்விட்டது
இரண்டாவது முகநூல் கம்பெனிக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கள் இனி முகநூல் லாபம் பாதிக்கும் என பங்கினை அவசரமாக விற்றிருக்கின்றார்கள். மார்க்கை நம்பி இனி லாபமில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கின்றார்கள்
ஒரே நாளில் 40 ஆயிரம் கோடியினை இழந்திருக்கின்றது முகநூல்
இதெல்லாம் எப்படி?
சங்கத்தின் கோரிக்கைகளை கொஞ்சமும் செவிசாய்த்து கேட்காமல் நான் யார் தெரியுமா? என்ற இறுமாப்பில் எமது கணக்கை முடக்கிய பாவத்திற்கு கிடைத்த தண்டனை
இனியாவது மார்க் திருந்தட்டும்
சங்கத்தோடு யார் மோதினாலும் தப்பமுடியாது என்பதை காலம் காட்டிகொண்டிருக்கின்றது
குஷ்பு சங்கத்தோடு பகைத்தால் உலகமே திரண்டு யாராக இருந்தாலும் அடிக்கும் என்பது உண்மையாகின்றது
இவ்வளவு பட்டும் இன்னும் பிளாக்கினை எடுக்க மாட்டேன் என அடம் பிடிக்கின்றான் மார்க், ம்ம் இன்னும் அடிவாங்க அடம்பிடித்தால் நன்றாய் படட்டும்
அதன்பின் கதறிகொண்டு பிளாக்கினை நீக்குவான் பாருங்கள்