இனி அமித்ஷாபாடு அவ்வளவுதான்

சரஸ்வதி சபதம் படத்தில் யானை மாலை போட்ட அந்த ஏழைபெண்ணின் கதைபோல் ஆகிவிட்டது தமிழக பாஜக தலைவர் பதவி

அதுவரை அந்தபதவியினை கண்டால் பாழும் கிணறை பார்த்தது போல ஆளாளுக்கு தலைதெறிக்க ஓடினார்கள்

தமிழிசை அக்கா மட்டும் “தாய்தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.. என்றும் நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என உள்ளுக்குள் அழுதபடி அமர்ந்திர்ந்தார்

திடீரென வானலோகத்தில் என்ன முடிவு எடுத்தார்களோ தெரியாது, மாலை போட்ட யானை தூக்கிதன் மேலேயே அமர்த்தியும் கொண்டது

அந்த நொடியிலிருந்து தென் ஆப்ரிக்க வைரசுரங்கத்தை சுற்றிவரும் கோஷ்டி போல ஆளாளுக்கு அந்த பதவியினை சுற்றுகின்றார்கள்

திடீரென “கொலை கொலையாய் முந்திரிக்காய்..நரியே நரியே சுற்றிவா” ஆட்டம் தொடங்கியதை அடுத்து பாஜக தலமையே அதிர்ந்துவிட்டது

புதிய தலைவர் நியமணத்தை தள்ளி வைத்திருக்கின்றார்களாம்

அனு சந்திரமவுலி, நயினார் நாகேந்திரன், கே.டி ராகவன், வானதி சீனிவாசன் என பல பெயர்கள் அடிபட்டாலும் அனு சந்திரமவுலி மற்றும் வானதி பெயர்கள்தான் போட்டியில் இருக்கின்றன என்கின்றார்கள்

ஒரு பெண்ணுக்கு பதவிகொடுக்கத்தான் டெல்லியும் விரும்புகின்றதாம்

இதில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். பாஜக தெற்கே வலுவான கட்சி. அங்கேதான் அதன் கோட்டை இருக்கின்றது. ஏகபட்ட அனுகூலம் அங்குதான் உண்டு

ஆக அடுத்த தலமை தெற்கில் இருந்துதான் வரவேண்டும் அது பெண்ணாகவும் இருத்தல் வேண்டும்

அப்பெண் தமிழிசை போல மருத்துவராகவும் இருப்பது கூடுதல் அவசியம்

அதனால் அந்த பணகுடி பராசக்தியும் பிரபல மருத்துவரும் அப்பகுதியின் பெரும் பாஜக அபிமானியுமான டாக்டர் Shyamala Mathi என்பவரை தலைவராக அமர்த்திவிடலாம்

அம்மையார் மிக சிறந்த மருத்துவர் மட்டுமல்ல அதை விட சிறந்த பாஜக அபிமானி

தமிழிசையின் இடத்தை மட்டுமல்ல, நிர்மலா மற்றும் அமித்ஷாவின் இடத்தை கூட நிரப்பும் ஆற்றல் அவருக்கு உண்டு

நம்மால் முடிந்த மிகசிறந்த தொண்டரை , மிக சிறந்த பாஜக தலைவராக வரகூடியவரை அடையாளம் காட்டியாயிற்று

இனி அமித்ஷாபாடு அவ்வளவுதான்