இனி எதற்கு சங்கங்கள் என்கின்றார் பிக்கு
இலங்கையில் நேற்று ஆண்கள் தினத்தில் புத்த தேரர் ஒரு மகத்தான அறிவிப்பினை செய்திருக்கின்றார்
அதாவது இலங்கையில் ஏகபட்ட புத்த சங்கங்கள் உண்டு அவற்றில் ஒன்று பொதுபல சேனா, சிங்கள மற்றும் புத்த தனித்துவத்தை காக்க அவை போராடுவதாக சொல்லி கொள்ளும், ஈழசிக்கலுக்கு காரணமே இக்கோஷ்டிதான்
அந்த சங்கங்களில் பிரதான சங்கமான பொதுபல சேனாவின் தலைமை பிக்கு நேற்று “நாட்டுக்கு சிறந்த ஆண்மகன் சிறுபான்மையினர் ஆதரவின்றி கிடைத்துவிட்டார், தனி சிங்கள புத்த வாக்குகளால் அவரால் வெற்றி பெற முடிந்திருக்கின்றது, நல்ல தலமை கிடைத்துவிட்டதால் சங்கங்களை கலைக்கின்றோம்” என சொல்லிவிட்டார்
ஆம் ஒருங்கிணைந்த சிங்கள புத்த தலமை வலுவாக கிடைத்த பின் இனி எதற்கு சங்கங்கள் என்கின்றார் பிக்கு
இந்திய சங் பரிவார் அமைப்புகள் மற்றும் ஏராளான பரிவார கோஷ்டிகள், கோத்தபாய கிடைத்தபின் சங்கங்களை கலைக்கும் தேரரை போல , மோடி கிடைத்தபின்னும் ஏன் சங்கங்களை கலைக்கவில்லை என நாம் கேட்க கூடாது..

ஒருவேளை அண்ணா முதல்வரானதும் இப்படி திராவிடர் கழகங்களை கலைத்திருந்தால் தமிழகம் உருப்படிருக்குமோ?