இனி என்னாகும்?

பிரிட்டனும் இந்த பிளாஸ்டிக் பொருள்மேல் நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது, அதாவது ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் ஸ்பூன், கப் மற்றும் இதர வகை நெகிழிகளை எல்லாம் தடை செய்ய போகின்றார்களாம்

இனி என்னாகும்?

இங்கே கடுமையான சத்தம் வரும் அதுவும் தேர்தல் நேரமல்லவா? மிக மிக உற்சாக சத்தம் வரும் இப்படியாக‌

லண்டனுக்கு வழிகாட்டியது எடப்பாடி, பிரிட்டனுக்கு வழிகாட்டியது தமிழகம், எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி மகிமை

பிரிட்டிஷ்காரனையே பின் தொடரவைத்த பழனிச்சாமி வாழ்க, பர்க்கிங்ஹாம் பேலசையே பார்க்க வைத்த பன்னீர் வாழ்க என கிளம்புவார்கள்

ஆம் கலைஞரை பார்த்துத்தான் பிடல் காஸ்ட்ரோ கியூபா மக்களுக்கு கண் சிகிச்சை கொண்டுவந்தார் என அங்கொரு கூட்டம் ஏற்கனவே சொல்லிகொண்டிருக்கின்றது

தேர்தல் நேரத்தில் இன்னும் பல காமெடிகளை பார்த்தே தீரவேண்டும் என்பது நம் தலைவிதி