இனி காட்சிகள் சட்டென மாறலாம்

ஈரானின் கடற்பகுதியில் போரீஸ் ஜாண்ச‌ன் ஒரு பக்கம் கப்பல்களை அனுப்புகின்றார்

அமெரிக்கா தன் கூட்டாளிகளுடன் கப்பல் கப்பலாக திரள்கின்றது

ஆனால் எல்லோரும் சொல்லும் வார்த்தை எங்கள் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவது என சொன்னாலும், உண்மை காரணம் வாய்ப்பு கிடைத்தால் ஈரானை நொறுக்குவது

ஈரான் என்ன விடுதலைபுலி பிரபாகரனா? யாருமே இல்லாமல் வல்லரசுகளுடன் மோதி சாவதற்கு?

அது மிக அழகான காரியத்தை செய்துவிட்டது, ரஷ்யாவிஐ அழைத்து வந்துவிட்டது

இனி ஈரானிய கடற்பகுதியில் ரஷ்ய ஈரானிய கடல்பயிற்சி தொடங்கும், அத்தோடு ரஷ்ய கப்பல்களும் அங்கு நிற்கும், ஈரானுக்கு ஒன்று என்றால் அவை களமிறங்கும்

ரஷ்யா மாபெரும் கடற்பயிற்சினை ஏன் புட்டீன் கலந்துகொள்ளுமளவு சில தினங்களுக்கு முன்பு நடத்தியது என்பதற்கான விடைஇது

ஆம் ஈரான் பக்கம் வரவே கிளம்பியிருக்கின்றார்கள்

ஈரானின் தென் கடல் மட்டுமல்ல, வட பக்கம் பெரும் ஏரியான காஸ்பியன் கடலிலும் இனி ரஷ்ய கப்பல்நிற்கும்

ஈரானுக்கு பெரும் பாதுகாப்பு, ஈரானும் இது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல, எங்கள் நட்பு நாடுடனான பயிற்சி என ராஜதந்திரமாக சொன்னாலும் உண்மையான அர்த்தம் “யாராவது வாலாட்டினால் தொலைத்துவிடுவோம்” என்பதாகும்

ஈரானிய கப்பல்களையொட்டி ரஷ்ய கப்பலும் கடலடியில் பெரும் நீர்மூழ்கிகளும் இயங்க ஈரானுக்கு மாபெரும் கவசம் கிடைத்தாயிற்று

இனி காட்சிகள் சட்டென மாறலாம்

இதை எல்லாம் பார்க்கும்பொழுது நம் கண்ணில் வரும் காட்சி ஒன்றுதான்

புட்டீன் போன்ற இரும்பு மனிதன் 1990களில் இருந்திருந்தால் ஏன் 2000களில் இருந்திருந்தால் மாவீரன் சதாம் உசேனை உலகம் இழந்திருக்காது