இன்னொரு அறை நண்பன் அஜித்குமார்

இன்னொரு அறை நண்பன் அஜித்குமார் என்பவன், அவன் பெயர் என்னவென இதுவரை சொன்னதில்லை ஆனால் தீவிர அஜித்ரசிகன்

அதனால் அவன் பெயரை அஜித் என வைத்துகொண்டான், அந்த அளவு அஜித் வெறியன், மொக்கை அஜித் படங்களையும் அவன் அளவு யாராலும் பார்க்க முடியாது

அவனிடம் இப்படி பெரும் மோசமான குணங்கள் இருந்தாலும் மிக பெரும் நல்ல குணம் மகளின் மேலான பாசம்

அவனுக்கு அவள் ஒரே மகள், அவனின் ஈரேழு உலகமும் அவளே, அவனுக்கு தெய்வமும் அவளே.

அவன் காதல் திருமணம் செய்தவன் என்றாலும் மகளின் மேலான பாசம் அந்த காதலையும் மறக்க செய்தது என்பான்

நாளெல்லாம் உழைப்பதும் இரவில் மகளுடன் போனில் விளையாடுவதுமாக அவன் வாழ்வு சென்றுகொண்டிருக்கின்றது, இதை தவிர அவன் வாழ்வில் ஒன்றுமில்லை

அதை தாண்டி ஒன்று உண்டென்றால் விசுவாசம் படத்தை பார்த்து அடிக்கடி அழுது கொண்டிருப்பான்

அந்த அளவு பாசம், அதிகாலை அவன் உழைக்க ஓடுவதும் இரவு வரை கடுமையாக உழைப்பதும் அவள் ஒருத்திக்காக.

அந்த அருமை மகளுக்கு இன்று பிறந்தநாள், அவன் நேற்றிரவு இருந்தே பிரார்த்தனைகளை தொடங்கிவிட்டான்

அந்த பிஞ்சுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் தூரமான வங்ககடல் அளவு ஆசிகளை ஆண்டவன் அந்த பிஞ்சுக்கு அருளட்டும்.

Happy Birthday Akshaya..