இன்று திருச்சிக்கு வருகின்றார் தங்க தலைவி

Image may contain: 2 people, people standing

செயலாளர் Periya Samy கவனத்திற்கு

இன்று திருச்சிக்கு வருகின்றாராம் தங்க தலைவி, முடிந்தால் அவரை சந்தித்து கட்சியின் கொள்கை, கோட்பாடு, அதன் அயரா உழைப்பு, மிக பெரிய நோக்கம், சிந்தனை , தலைவிக்காக சங்கம் நடத்தும் போராட்டம் இவற்றை பற்றி தெரியபடுத்தவும்

ஒரு வேளை தலைவி மிக பரபரப்பாக இருந்து சந்திக்க முடியாவிட்டால் பரவாயில்லை,

அதற்காக தீகுளிக்கும் முயற்சி எல்லாம் செய்ய வேண்டாம். இன்னொருநாள் பெரும் படையுடன் சென்று நீதி கேட்டுவிடலாம்

திருச்சி வரும் எங்கள் தலைவிக்கு, “இரண்டாம் மங்கம்மாளுக்கு” வரவேற்பு கொடுப்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது

காவேரி கரையில் “காலத்தை வென்ற காவிய” தலைவி முழங்க போகும் காட்சி இன்று நடக்கின்றது

திருச்சியிலும், கரூரிலும் முழங்க போகும் பெண் சிங்கத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

“நாளைய தமிழகம் தலைவிக்கானது” என்பதில் சங்கம் பெருமகிழ்ச்சியும், ஆனந்தமும் கொள்கின்றது