இன்று தொடங்க இருக்கின்றது உலக கோப்பை கால்பந்து போட்டி

இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கின்றது உலக கோப்பை கால்பந்து போட்டி

உலகமே கவனித்துகொண்டிருக்க முதல் போட்டியில் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன‌

இரண்டுமே சொத்தை அணிகள், கடைசி இடத்திற்கு முந்தைய இடத்திற்கு சண்டை இடுகின்றன‌

கால்பந்தில் பிரதான அணிகள் மோதுவது போல, அரசியல் எதிரிகள் மோதும் ஆட்டமும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போல பிரதானம்

அதில் சவுதி ஈரான், ரஷ்யா இங்கிலாந்து என பல ஆட்டங்கள் உண்டு, உலககொப்பையினை விட்டால் கூட சம்பந்தபட்ட ரசிகர்கள் விட்டுவிடுவார்கள்

ஆனால் இந்நாடுகளிடம் தோற்றால் சங்குதான்

மிகபெரும் ஆரவாரத்துடன் இன்னும் கொஞ்சநேரத்தில் உலகின் மிக பிரமாண்டமான போட்டி தொடங்க இருக்கின்றது

மலேசியர்கள் கால்பந்து பிரியர்கள் மற்றும் வெறியர்கள் என்பதால் மிக உற்சாகமாக டிவி முன் அமர்ந்திருகின்றார்கள்

உலகத்தாரின் மகிழ்வில் நாமும் பங்குபெறுவோம்