இன்றைய காட்சிகள் பின்னொரு நாளில் பெரும் நன்மையாய் விளையும்
சோவியத் கார்பசேவ் காலத்தில் நொறுங்கியது, எட்சின் காலத்தின் ரஷ்யா பலவீனமானது
ஆனால் ரஷ்யாவினை உடைத்த கார்பசேவுக்குத்தான் உலகின் நோபல் பரிசும் மிக சிறந்த பொருளாதார வித்தகர் எனும் பரிசும் கொடுக்கபட்டது
உண்மையில் அவர் தோல்வி அடைந்த அதிபர் ஆனாலும் ஐரோப்பாவின் மிகசிறந்த மனிதர் என்றார்கள்? ஏன் அதுதான் ஐரோப்பா அரசியல்
அந்த அரசியல் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகனை கொண்டாடினால் எப்படி இருக்கும்?
அந்த ரஷ்யா இனி அவ்வளவுதான் என்றார்கள், அணு ஆயுதங்களை அது ஒப்படைத்துவிட்டு ஏதோ வாழட்டும் என்றவரை நிலமை சென்றது
ஆனால் புட்டீன் அசத்தினார், தனிமனிதனாக ரஷ்யாவினை இன்று பலமிக்கதாக்கிவிட்டார்
அவரால் முடியாது என்றார்கள், ரஷ்யாவினை அழிக்கின்றார் என்றார்கள் என்னவெல்லாமோ சொன்னார்கள்
ஆனால் மருந்து என்பது கசப்புத்தான் மெதுவாகத்தான் பலன் கொடுக்கும் என சொல்லிவிட்டு அவர்போக்கில் இருந்தார் புட்டீன்
அவர் சர்வாதிகாரிதான் சந்தேகமில்லை ரஷ்யாவுக்குள்ளே முணுமுணுப்புதான் ஆனால் அவரால் ரஷ்யா நிமிர்ந்தது என சொல்லிகொள்கின்றார்கள் ரஷ்யர்கள்
நோபல் பரிசுபெற்ற கோர்பசேவினை விட ரஷ்யர்களின் நாயகன் இன்று புட்டீன்
சீனாவின் குழப்பமான காலத்தில் டெங் ஜியோ பிங் வந்தார், சில சீர்திருத்தங்களை செய்தார்
சைனா முதலில் பாதிக்கபட்டது, அவர் மேல் அதிருப்தி கிளம்பியது, டெங் அசரவில்லை
புது கட்டடம் கட்டபடும்பொழுது பூமியினை தோண்டும்பொழுது சில அசவுகரியங்கள் வரும் என சொல்லிவிட்டு அவர்போக்கில் இருந்தார்
டினான்மென் சதுக்கத்தில் அவருக்கு எதிரான போராட்டத்தில் 20 ஆயிரம் பேரை நசுக்கி கொன்றது உலகின் கொடூரமான தருணம்
ஆனால் நாடு முக்கியமா அவர்களா என்றால் நாடுதான் முக்கியம் என சொல்லிவிட்டு அவர் போக்கில் அவர் வேலையினை பார்த்தார்
சீனா சீறி எழும்பியது, மெதுவாக அவரை புரிந்துகொண்ட சீனா வணங்கியது
தான் இறந்தால் எனக்க்காக அஞ்சலி செலுத்த விடுமுறை அளிக்க கூடாது, நினைவுசின்னம் எழுப்ப கூடாது என சொல்லிவிட்டு செத்தார் டெங்
கண்களில் நீர்வழிய சீனர்கள் வேலை செய்துகொண்டே அவருக்கான அஞ்சலியினை செலுத்தினர்
எந்த நாடு மறுவுருபெரும்ப்பொழுது சிக்கல் இல்லை?
எல்லா நாடும் மாற்றம் பெரும் பொழுது சிக்கல் வரும், அதன் பின்பே எழும்
தன்மேல் சர்ச்சை வராமல் சாதித்த தலைவன் என உலகில் எனவனுமில்லை
லிங்கன் முதல் லீகுவான் யூ வரை சிக்கலை சந்தித்தவர்களே ஆனால் அவர்கள் போட்டு சென்ற பாதையில்தான் தேசங்கள் வளர்ந்து நிற்கின்றன
பழையன கழிதல் செய்து புதியன புகுத்தும்பொழுது சிக்கல் வரத்தான் செய்யும்
அம்மை நோய்க்கு தடுப்பாக ஒரு ஊசி ஏற்றும்பொழுது முதலில் காய்ச்சல் வரும் அதன் பின்பே உடல் நலம் பெறும்
அய்யய்யோ காய்ச்சல் வருமே என அஞ்சினால் காலத்துக்கும் நோய்வராத மருந்தை பெறமுடியாது
புட்டீனின் ரஷ்யா போல, டெங்கின் சீனா போல இங்கும் சில காட்சிகள் நடக்கின்றன
பின்னொரு நாளில் இதை தேசம் உணரும்
நல்ல தலைவர்களையும் அவர்களின் திட்டங்களையும் அவர்கள் வாழும் பொழுது தேசம் அறிவதில்லை
தலைவர்கள் என்ன அவதாரங்களே உலகில் அந்தபாடுதான் பட்டிருக்கின்றன இதில் தலைவர்கள் எம்மாத்திரம்?
இன்று நீவீர் ஆயிரம் பேசலாம்
ஆனால் உலகை கவனித்து உலக சூழலை உலக நாடுகளின் வரலாற்றை கவனிப்பீர்களாயின் இந்தியாவின் இன்றைய காட்சிகள் பின்னொரு நாளில் பெரும் நன்மையாய் விளையும்
அது நிச்சயம் நடக்கும்
இன்று எம்மை சாடுபவர்கள் எல்லாம் அன்று உண்மையினை உணர்வீர்கள்