இன்றைய துளிகள் 19/06/2019
அவனே பேரரிஞன்
கூத்தாடிகளை கலைஞர்கள் என அரவணைத்து அவர்களை வைத்து அரசியல் செய்த அண்ணாவினை விட
“டேய் கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே அது ஆபத்து.. அவனை அரசியலுக்கு இழுக்காதே” என பகிரங்கமாக எச்சரித்தானே,அந்த எம்.ஆர் ராதாவே அறிஞன்
அவனே பேரரிஞன்
அவனே திராவிட தலைவன்

அவரு கடவுளரு..புரியூதா..
பெரியார் மண்ணுடோவ்.. திராவிடம் டோவ்…
அடுத்தால் என்ன?
ராஜராஜ சோழன் வெறும் மன்னன், ஆனால் தள்பதி பாகிஸ்தான் தீவிரவாதிய சுட்டுருக்கார், பேய் பிசாசு கூட சண்டை போட்டிருக்கார்
அவரு கடவுளரு..புரியூதா..

அதிமுக முதல்வர்கள் எல்லாம் அப்பல்லோவுக்கு செல்வார்கள் என்பது கழக விதி..
வேண்டாம், இதற்குமேல் ஒன்றும் சொல்ல வேண்டாம்
அவர் நலமாக திரும்பட்டும்
அநேகமாக மழை வந்து அல்லது சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்தால் அவர் டிஸ்சார்ஜ் ஆகி திரும்புவார்
இல்லை என்றால் மழை வரும்வரை இட்லி சாப்பிட்டு கொண்டிருப்பார்.
பகுத்தறிவு கேள்விகள்
சமஸ்கிருதம் ஒரு புரியாத மொழி, ஏமாற்று மொழி ஏன் மற்ற பாஷைகள் கடவுளுக்கு புரியாதா? : பகுத்தறிவு கேள்விகள்
அங்கே ஒரு கூட்டம் பரிசுத்த ஆவியால் நிரம்பி “ஷப்பாஷப்பா பஸ்முஸ்கா சிஷாடீம்ம் ஷாகஷாக ..” என அந்நிய பாஷையினை பாகுபலி காளகேய தலைவனைபோல் பேசிகொண்டிருக்கின்றது
அங்கெல்லாம் ஒரு பயலும் பகுத்தறிவு பேசுவதே இல்லை
இவ்வளவுதான் பெரியாருக்கும் அண்ணாவுக்குமான தகுதி
அணில் குஞ்சு’ஸ் Done a great Job..

கோப்பையினை தூக்குறோம்
இன்னும் கொஞ்ச நேரத்துல ஆஸ்திரேலியானை தாக்குறோம் தூக்குறோம், அப்புறம் இந்தியாவினை விரட்டுறோம்
கோப்பையினை தூக்குறோம்
இடையில் இங்கிலாந்தோ நியூசிலாந்தோ வந்தால் சப்பாத்திக்கு மாவு அடிப்பது போல அடிக்கிறோம் என உற்சாகமாக சொல்லி கொண்டிருக்கின்றது வங்கதேசத்து கோஷ்டி
ஏம்பா மேக்ஸ்வெல் , இவனுகள ஏதாவது பண்ணி தொலையும், கர்த்தர் மொத்த ஆஸ்திரேலியாவின் பாவங்களையும் மன்னிப்பார்