இன்றைய துளிகள் …

ஏராளமான சமூக பணிகளை செய்திருக்கின்றார் அனில் அம்பானி : செய்தி

பாருங்க அமித்ஜி, அனில் அம்பானிக்கு நாம எவ்வளவு செஞ்சிருப்போம், எப்படி எல்லாம் உதவியிருக்கோம்? ஆனா அதை எல்லாம் வெளியில் சொல்லமுடியுமா? இதுதான் அரசியல்

ஆமா மோடிஜி கட்டட‌ அஸ்திவாரமும் மரத்தோட‌ வேரும் வெளியில் தெரியுமா என்ன?

*************************************

தமிழகத்தில் பாஜக அமைப்பதுதான் பலமான கூட்டணி: தமிழிசை செளந்தரராஜன்

திருமலை நாயக்கர் மகால் தூணில் கூட்டணியாக ஏறி அமர்ந்து கொள்வார்கள் போல…

************************************************************************

வருடமெல்லாம் காதலர் தினம் கொண்டாடும் ஒரே ஆசாமி நம்ம நித்திசாமிதான்

அதுவும் எல்லா நாட்டு பெண்களோடும் கொண்டாடும் யோகம் அவர் ஒருவருக்கே கிடைத்திருக்கின்றது..

****************************************************

காதலர் தினம் கொண்டாட வாய்ப்பே இல்லா இரு தலைவர்கள் இதோ…

இவர்கள் ஆளும் கட்சி எதிர்கட்சியாக அமைந்துவிட்டது நாட்டின் துரதிருஷ்டமன்றி வேறல்ல…

அதிலும் உத்திரபிரதேச நிலை மகா மோசம்..