இன்றைய துளிகள்
விமானம் ஒட்ட கற்றுகொடுத்தார்
“புலிகள் விமானபடையில் பிரபாகரன் எனக்கு விமானம் ஒட்ட கற்றுகொடுத்தார், அது பறக்கும்பொழுது சத்தமும் வராது, யார் கண்ணுக்கும் தெரியாது அப்படி ஒரு விமானம் அது
அதுல ஏறி கொழும்பு, ஆஸ்திரேலியான்னு சுத்துனோம், ஏன் நம்ம காரைக்குடி பக்கம் கூட வந்து கோழிகறி சாப்பிட்டு போனோம், ஒரு பயலும் கண்டுபிடிக்கல , ஏன்னா அது கண்ணுக்கு தெரியாத தொழில்நுட்பம்
இன்னைக்கு இந்திய ராணுவம் போய் அடிச்சுதுங்குறான், நாங்கல்லாம் நினைச்சா அப்போ இந்தியாவே இருந்திருக்காது
இப்போ சிக்கல் என்னென்னா அண்ணன் அந்த விமானத்தை எடுத்து எங்கே போனார்னு தெரியல. விமானமே கண்ணுக்கு தெரியாதுங்கும்போது அண்ணன் எப்படி தெரிவார்? இது தெரியாமல் பலர் அவர் இல்லண்ணு சொல்றானுக..
அவர் இப்போ கூட நம்ம மேல இருந்து நம்மள கண்காணிக்கலாம், தம்பிக படையின பார்த்து சந்தோஷபடலாம் யாருக்கு தெரியும்?
ஹஹஹஹஹஹ்ஹஹஹஹ்ஹா..”
முதல்வர் பழனிசாமி
விமானப்படை தாக்குதல்: பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாடு; முதல்வர் பழனிசாமி புகழாரம்
இனி நம்மளும் நம்ம மகனும் மோடிய பாராட்டி தொலைக்கணுமே, மவனே மைக் எங்கே?
வைரமுத்து பெருமிதம்
“ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே” : வைரமுத்து பெருமித கவிதை
என்னதான் கவிதை எழுதினாலும் ரொம்ப கஷ்டம் கவிஞரே
சினிமா கேப்டன் வாழ்த்து
பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு விஜயகாந்த் பாராட்டு
ஒரு காலத்தில் சினிமாவில் எத்தனை காஷ்மீரிய தீவிரவாத முகாம்களை ஒழித்து, எவ்வளவு தீவிரவாதிகளை இழுத்து வந்தவர் கேப்டன்
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டி பிடித்தவர் அவர்
அதனால் கம்பீரமாக நிஜ கேப்டன்களுக்கு வாழ்த்து சொல்கின்றார் சினிமா கேப்டன்