இன்றைய விஞ்ஞானமும் அதை ஒப்புகொள்கின்றது

வெறுங்காலில் நடப்பதால், உடல் நரம்புமண்டலத்தின் செயலாற்றல் அதிகரிக்கிறது, கால் தரையில் நேரடியாக படும்பொழுது பலவிதமான நன்மைகள் கிடைகின்றன என்கின்றது மருத்துவ ஆய்வு

இதனால் வெறுங்காலோடு வாக்கிங் செல்பவர்கள் எண்ணிக்கை மேல்நாடுகளில் அதிகரித்திருக்கின்றது

பொதுவாக கீழை நாடுகளில் காலுக்கு கொடுக்கபடும் மசாஜ் என்பது பிரசித்திபெற்றது

கால் பாதத்தில் கொடுக்கபடும் அழுத்தத்திலே பல வகையான நோய்களை தீர்க்கமுடியும் என்கின்றது சீன மருத்துவம், அவ்வாறான மருத்துவம் இன்றும் உண்டு

இன்றைய விஞ்ஞானமும் அதை ஒப்புகொள்கின்றது

ஆலயத்தினுள் வெறும் காலோடு வரவேண்டும் எனும் கட்டளை எல்லா மதங்களிலும் உண்டு

இந்து மதத்தில் இது மிகபெரும் வலியுறுத்தலாகும், பிரமாண்ட ஆலயத்தினுள் அடிபிரதட்சணம் என சொல்லபடுவது இந்த முறையே

பிரமாண்ட ஆலயதில் வெறும் காலோடு மெதுவாக நடக்க சொல்வது இதனாலே..

விரத காலங்கள், யாத்திரை காலங்களில் வெறுங்காலோடு நடக்க சொல்லும் தத்துவம் இதுவே..

இன்று விஞ்ஞானம் சொல்லும் எல்லா விஷயங்களையும் அன்றே வழிபாடு என சொல்லி பின்பற்ற சொன்ன உயர்வான மதம் இந்துமதம்..