இப்படியும் ஒரு பார்வை…..

Image may contain: 2 people, people smiling

அண்ணே ராமசந்திரன் ஒரு வள்ளல், அவர் வீட்டுக்கு போனால் சாப்பிட வைக்காமல் விடமாட்டார்

அப்படியா?

ஆமாம்

அவர் வீட்டுமுன்னால் தினம் 200 பேர் அவரை பார்க்க நிற்பார்களாமே, அவர்களை எல்லாம் அழைத்து சாப்பிட சொல்வாரா?

இல்லை, அவரை சந்திக்க அனுமதிபெற்றவர்களை மட்டும் சாப்பிட சொல்வார்

யாரெல்லாம்?

ம்ம் தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்கள், சினிமாகாரர்கள்

இவர்கள் எல்லாம் சோற்றுக்கு இல்லாதவர்களா? இவர்கள் எல்லாம் ராமசந்திரனிடம் உதவிபெற்று ஊரெல்லாம் சொல்பவர்கள், ஆக அவர் செய்தது விளம்பரம்

ம்ம் அப்படி அல்ல அள்ளி கொடுத்தார்

யாருக்கு? உனக்கா உன் குடும்பத்திற்கா

இல்லை ஆனால் கொடுத்தார், எத்தனையோ நலிந்த கலைஞர்கள் , பத்திரிகையாளருக்கு உதவினார்

பின்னே அவர்கள் வள்ளல் என சொன்னால்தான் ஊருக்கு தெரியும்,, யாருக்கு கொடுத்தால் ஊரெல்லாம் தெரியுமோ அவர்களுக்கு கொடுத்தார், எல்லாம் விளம்பர செலவு கணக்குடா.

இருக்கலாம், ம்ம் பிரபாகரனுக்கு 100 கோடி கொடுத்தார்

ஒரு மாநில முதல்வர் இன்னொரு நாட்டு தீவிரவாத குழுவிற்கு மத்திய அரசு அனுமதி இன்றி கொடுக்க முடியுமா? விடுமா? அந்த 100 கோடிக்கு வருமானம் என்ன? வரி என்ன?

ம்ம் ஹிஹிஹி அதெல்லாம் எனக்கு எப்படின்னே தெரியும், ஆனால் அவர் ஈழம் காத்தார்

எது அமைதிபடை அட்டகாசம் செய்யும்பொழுது ராஜிவ்காந்தியுடன் கை கோர்த்து நின்றதா?

அண்ணே அவர் ஆட்சியில் ஊழல் இல்லை

இந்த ரே கமிஷன், பால் கமிஷன் எல்லாம் தெரியுமா?

இருங்கண்ணே என்னென்னமோ சொல்றீங்க நல்லா கேட்டுட்டு வாரேன்

இருடா இத மட்டும் கேட்டுட்டு போ

சொல்லுங்கண்ணே

நடிகர் நம்பியார் தெரியுமா?, நல்ல மனுஷன் அவர்கிட்ட கேட்டாங்க, ராமசந்திரன் கட்சியில் நீங்க ஏன் சேரலை, அமைச்சர் ஆயிருக்கலாமேன்னு

நான் தப்பு பண்ணிட்டேன்னு நம்பியார் வருத்தபட்டிருப்பாரே

போடா டேய், நம்பியார் சொன்னார் ராமசந்திரனுக்கு சந்தேக புத்தி அதிகம், நண்பர்னு சேர்ந்துட்டா சந்தேகபட்டே நம்மள சாகடிப்பாரு, அதனால அவர்கிட்ட எதிரியா இருக்கணும் இல்ல தள்ளி இருக்கணும்

ஓஓ சேட்

டேய் நம்பியாரே இப்படி சொன்னா அந்த ஜெயா என்ன பாடுபட்டிருக்கும் நினைச்சி பாருடா

அண்ணே ரஜினி கூட இதே ஆட்சிதான் கொடுப்பேன்னு சொல்றாரு

அதாண்டா எனக்கும் பயமா இருக்கு, இப்படி சொன்ன அந்த ரஜினிகாந்த யாருக்குடா பிடிக்கும்?, ஒரு விஷயம் ரொம்ப கவலையா இருக்குடாஅவர் இப்போ இல்லைடா செத்து போயிட்டாரு

யாருண்ணே அண்ணாவா, பெரியாரா?

அந்த பாலசந்தர் மட்டும் இருந்தா இந்நேரம் ரஜினியை நடுரோட்டில் செருப்பால அடிச்சிருப்பாருடா, நம்ம எல்லாரையும் விட ராமசந்திரன் அட்டகாசம் அவருக்குதாண்டா நல்லா தெரியும்

அண்ணே ஒருவேளை அந்த பாலசந்தர்கிட்ட ரஜினி நான் ராமசந்தின் வழி, கமல் நான் ஏதோ ஒரு வழியில அரசியல் பண்ணபோறோம்னு சொல்லி அவர் செத்துருப்பாரோ?

ஆமாடா, அந்த சந்தேகம் இப்போதாண்டா வருது , இன்னும் யாரையெல்லாம் இவனுக கொல்லபோறானுகளோ தெரியலடா