இப்படியே புலம்பிட்டே இருங்கடா

ப.சிதம்பரம் திமுக தயவால் மத்திய அமைச்சரானார் என திமுக அன்பர்கள் குத்தாட்டம் ஆடிகொண்டிருக்கின்றனர்

இவர்கள் தயவில் பிரதமரான மன்மோகன்சிங் ஏன் கலைஞர் அஞ்சலிக்கு வரவில்லை என கேட்டால் பதிலே வராது

கூட்டணி அரசியல் என்பது வியாபாரம், ஒன்று கொடுத்தால் ஒன்று கிடைக்கும் அவ்வளவுதான் விஷயம்

இதற்கெல்லாம் எம்.ஆர் ராதா ஸ்டைலில்தான் பதில் சொல்ல வேண்டும்

“ஒரு பயலும் சும்மா ஆதரவு கொடுக்கல, பசையான அமைச்சரவை எல்லாம் வாங்கிட்டுத்தான் ஆதரவு கொடுத்தீங்க‌

அப்படியும் தமிழ்நாட்டுல திமுக மைனாரிட்டி கவர்மென்ட காங்கிரஸ்தான் தாங்கிட்டு இருந்து, மறக்குமா?, நல்லங்க இங்க மந்திரி பதவி கொடுத்தீங்களா? இல்லியே. அவ்வளவுதான் உங்க சமூக நீதி..

சொல்றானுக பாரு, எப்பா.. சிதம்பரத்த அமைச்சராக்கினது திமுகவாம்

ஏண்டா டேய் அழகிரி, ராசா எல்லாம் எப்படி அமைச்சரானாங்க, கனிமொழி முதல்தடவை எப்படி எம்பி ஆச்சுது..

வைகோ போர்வாள்னு சொன்னானுக, அவர் பிரிஞ்சதும் வாள் துருப்பிடிச்சிட்டுன்னானுக, இப்போ மறுபடியும் போர்வாள்னு சொல்றானுக, இனி அது குடலை கிழிக்கும் போது என்ன வாள்னு தெரியும்

தம்பி இருபது இடம் வேண்டுமா? இதயத்தில் இடம் வேண்டுமான்னு கேட்டு வைகோவினை டம்மி ஆக்கியிருந்தார் கலைஞர்

இப்பொழுதும் அறிவாலய வாட்ச்மேன் வேலை வேண்டுமா வேண்டாமா என கேட்க வேண்டிய வைகோவினை பார்லிமென்ட்க்கு அனுப்பிட்டு இவர்களுக்கு சத்தம் வேற…

அடேய் உங்களுக்கெல்லாம் இனி உதயநிதிதான் நிரந்தர் தலைவர், இப்படியே புலம்பிட்டே இருங்கடா ய்ப்பா…..”