இப்பொழுதெல்லாம் ரஷ்யா இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை

இப்பொழுதெல்லாம் ரஷ்யா இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை, இந்தியா தன் வரலாற்றிலே முதன் முறையாக அமெரிக்காவில் இருந்து ஆயுதம் வாங்குவது, இஸ்ரேலுடன் கனிசமான நெருக்கம் பேணுவது எல்லாம் ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை

இந்திய தரப்பையும் குற்றம் சொல்லமுடியாது, சொத்தை ஆயுதங்களுக்கு பெரும் பணம் கறப்பதும், புதியதை கேட்டால் பழையதை மேம்படுத்தலாம் என ரஷ்யா ஒருமாதிரி இந்தியாவினை ஏமாற்றுவதும் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை

என்ன செய்யலாம் என யோசித்தபொழுது பாகிஸ்தானை முதுகில் மிதித்து அனுப்பியிருந்தார் டிரம்ப்

ஆச்சரியமாக அமெரிக்க வரலாற்றிலே பாகிஸ்தானை கைவிட்ட முதல் அதிபர் அவர்தான்

இதை எதிர்பாரா பாகிஸ்தான் கண்ணீர் விட்டு அழுதபடியே தெருவில் சுற்றிகொண்டிருக்க, விடுகதையா இந்த வாழ்க்கை.. என அது அழுதபடி இருந்தபொழுது அதன் தோளில் நட்புகரம் போடுகின்றது ரஷ்யா

“சீனாவும் ஈரானும் நானும் அமெரிக்க எதிரிகள் அதில் நீயும் வந்து சேர்ந்துகொள், இந்த இந்திய பயல் சரியில்லை” என கண்ணீரை துடைத்துவிட்டு கொண்டிருக்கின்றது

நடக்கும் காட்சிகளை இந்தியா பார்த்துகொண்டிருக்கின்றது, ரஷ்யா இப்பொழுதெல்லாம் சர்வதேச அரசியலில் ஆட ஆரம்பித்துவிட்டது

நாம் என்ன சொல்லலாம், ரஷ்யாவுக்கு இப்படி சொல்லலாம்

“இதோ பார் ரஷ்யாவே, அந்த பாகிஸ்தானை ஆதரித்த எல்லோர் நிம்மதியும் போய்விடும், அமெரிக்கா இதுகாலம் பார்த்துவிட்டு “அப்பாலே போ சாத்தானே” என விரட்டியிருக்கின்றது, சீனா வேறுவழியில்லாமல் கட்டி அழுகின்றோம் என கதறுகின்றது, அந்த வரிசையில் நீயும் சேர்ந்து கொள்வது விதியானால் சிக்கி சாவு..”