இப்போது நடக்க வாய்ப்பே இல்லை

பாஜக ஏன் தமிழகத்தில் இதுவரை வெற்றிபெறவில்லை

இரண்டே விஷயம் முதலில் வசீகரமான தலமை இல்லை, அக்கா தமிழிசை அதிரடி தலைவர் தவிர வசீகரமான தலைவர் அல்ல‌

இரண்டாம் விஷயம் இங்கு எல்லா கோஷ்டிக்கும் சரியான அமைப்பும் தலமையும் உண்டு

திமுக, திக, அதிமுக, முஸ்லீம் லீக், கிறிஸ்தவர்கள் எல்லாமே முறைபடுத்தபட்ட அமைப்பு

ஆனால் இந்துக்களுக்கு அப்படி அல்ல, முறையான தலமையும் ஒற்றுமையான கோட்பாடும் கட்டுப்பாடும் இல்லை

ஆனால் அவர்கள் அதிகம், மக்கள் சக்தியில் மிக அதிகம்

இந்து எனும் இணைப்பு அவர்களில் உண்டு, அதை சரியாக கண்டறிந்து இணைக்கத்தான் யாருமில்லை

முன்பொரு காலத்தில் நெப்போலியன் சொன்னான், உலகின் மாபெரும் ராணுவத்தை இன்று நான் வைத்திருக்கலாம் ஆனால் கிழக்கே சீனன் எனும் அரக்கன் தூங்கிகொண்டிருக்கின்றான்

அவன் மொழியாலும் இனத்தாலும் ஒன்றே ஆனால் சரியான தலமையும் விழிப்பும் இன்றி உறங்குகின்றான்

ஓருகாலத்தில் அது உலகை மிரட்டும்

அது இன்று நடந்தாயிற்று

தமிழக பாஜக நிலைக்கும் நெப்போலியனின் வார்த்தைக்கும் தொடர்பு அதிகம்

சரியான தலமையும், மிக சிறந்த ஒருங்கிணைப்பும் கொண்டு அவர்களை ஓரணியில் திரட்டினால் பெரும் எழுச்சி நிச்சயம்

ஆனால் அதெல்லாம் இப்போது நடக்க வாய்ப்பே இல்லை