இம்மாதிரி அர்த்தமே இல்லாமல் பேசிகொண்டிருக்கின்றது
பழைய கதைதான் ஆனாலும் சில திராவிட பண்பாடுமிக்க இனமான தமிழர்கள் அதை சீண்டுகின்றார்கள்
பிராமண பெண்கள் கணவனை அண்ணா என்றும் அடுத்தவனை மாமா என்றும் அழைப்பார்களாம், இதை சொன்னது வாழும் கண்ணகி அருள்மொழி என்பவர், உடனே இந்த திராவிட கோஷ்டிகளும் பிடித்து கொண்டன
தமிழில் எல்லா மொழி வார்த்தைகளும் கலந்தது போலவே வடமொழி வார்த்தைகளும் உண்டு, பிராமண தமிழில் சமஸ்கிருத கலப்பும் உண்டு
அண் என்பது வடமொழியில் வேராவன, உயிரானவன், ஆதாரமானவன் என்ற பொருளில் வரும். அப்படித்தான் “அண்”ணல் போன்ற வார்த்தைகளும் உருவாயின
அந்த பொருளில்தான் கணவனை அண்ணா என அழைக்கும் வழக்கம் அங்கு வந்தது
உடன்பிறப்பினை குறிக்கும் சொல் சக + உதரன் எனப்படும் சகோதரன் எனும் வார்த்தை, அண்ணன் என்பது அங்கு சகோதனை குறிப்பது அல்ல, அண்ணன் எனும் மூத்தவனை ஜெயேஷ்ட பிரதா என்றுதான் குறிப்பார்கள்
பிரதா என்றால்தான் சகோதரன், ஆங்கிலத்திலும் உடன்பிறப்புக்கு அவ்வார்த்தையே
தமிழில் அவர்கள் ஆத்துக்காரர் என கணவனை அழைத்தாலும் அகத்துக்காரர் என்ற சுத்தமான வார்த்தை அது
அகநானூறு என இல்லற காதலின் சிறப்பினை கொண்டாடிய தமிழன் அந்த வார்த்தையினை கிண்டல் செய்வதுதான் திராவிட தமிழ் புரட்சி
“மாம” என்பதன் பொருள் எங்களை சார்ந்தவர் என்ற மரியாதையான சொல், அது சமஸ்கிருத சொல்
தமிழில் மாமன் என்ற சொல் கிடையாது, அம்மான் என்றொரு சொல்லே உண்டு அது தாயுடன் பிறந்த சகோதரரை அம்மான் என்றே அழைப்பார்கள்
இப்படியாக ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் ஒரு மூலமும் உண்மையும் வார்த்தைகளின் மொழியும் பொருளும் புரியாமல் பெரியாரின் தாடியிலும் அண்ணாவின் துண்டிலும் தொங்கிகொண்டு கலைஞரின் கண்ணாடியினை போட்டு எல்லாம் கருப்பு என திரியும் மடத்தனமிக்க சமூகம் ஒன்று இருக்கின்றது
அதுதான் இம்மாதிரி அர்த்தமே இல்லாமல் பேசிகொண்டிருக்கின்றது
ஆங்கிலத்தில் சித்தப்பா, பெரியப்பா , மாமன், மச்சான் உட்பட எல்ல உறவும் அங்கிள் என்ற பெயரில்தான் வரும்
அதை எல்லாம் ஒருபயலும் கேட்க மாட்டான் , அவர்களின் இருமொழி கொள்கை அப்படி