இம்ரான்கானை குறிவைத்து அடிக்கின்றார்கள்

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் உண்டு, வோட்டு வங்கியில் சிறுபான்மையும் முக்கியம் அல்லவா?
இது இம்ரான்கானையும் விடவில்லை, பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பழமையான சிவன்கோவில் பாதுகாக்கபட வேண்டும் என இம்ரான் சொல்லபோக அங்கு உடனே “பாகிஸ்தானின் பரமசிவனே” என அல்லக்கைகள் போஸ்டர் அடித்துவிட்டன
உதயநிதிக்கு வாய்த்த அல்லக்கைகள் போல பாகிஸ்தானிலும் இருக்கின்றன
விஷயம் பற்றி எரிகின்றது, இந்து கடவுளை கேவலபடுத்துகின்றார் இம்ரான் என சர்ச்சை வெடிக்கின்றன
தமிழகத்தில் சினிமாவில் ரஜினி, கமல் என பலரும் சிவன் வேடத்தை போட்டுவிட்டதால் இங்கு இது வழக்கம் என யாரும் கண்டுகொள்ளவில்லை
ஆனால் வடக்கே சலசலப்பு வருகின்றன, ஆர்.எஸ்.எஸ் முறுக்குகின்றது
பால் தாக்கரே இருந்தால் இந்நேரம் பெரும் எதிர்ப்பு காட்டியிருப்பார் அவர் இல்லை என்றாலும் ஆங்காங்கே பலத்த சர்ச்சை வெடிக்கின்றது
இந்து கடவுள்களை தமிழ் சினிமாவில் எவ்வளவு வேடம் போடமுடியுமோ அவ்வளவும் போட்டு கலாய்த்தும் விட்டார்கள், தமிழர்களும் கண்டு சிரித்தும் விட்டார்கள்
உண்மையில் தமிழக இந்துக்களுக்கு பெருந்தன்மை அதிகம்
மற்ற இந்துக்கள் அப்படி இல்லை போல, இம்ரான்கானை குறிவைத்து அடிக்கின்றார்கள்