இம்ரான்கான் சீறதொடங்கிவிட்டார்
இம்ரான்கான் சீறதொடங்கிவிட்டார், காவேரி இல்லாவிட்டால் கன்னட அரசியல் இல்லை என்பது போல காஷ்மீர் இல்லாவிட்டால் பாகிஸ்தானின் அரசியல் இல்லைஎன்பது ஒன்றும் ரகசியமல்ல
கிடைத்த வாய்ப்பில் அடித்துநொறுக்க வேண்டும் என மனிதர் கொதித்து பேச தொடங்கிவிட்டார்
இஸ்லாமிய நாடுகளின் பொதுபிரச்சினையாக அவர் காஷ்மீரை இழுக்க முனைகின்றார்
ஆனால் இதுவரை பாலஸ்தீனம், குர்து, செசன்யா, சீனாவின் உய்குர் , செர்பியா என உலகின் பல இடங்களில் இஸ்லாமிய சமூகம் என்ன நீதி பெற்று கொடுத்ததென்றால் தெரியாது
அவர்கள் அப்படித்தான்
ஆயினும் ஐ.நா சபைக்கு செல்வேன் அயல் கிரகத்துக்கு செல்வேன் என்றெல்லாம் பொங்கிவிட்ட இம்ரான்கான் கடைசியில் சொன்னதுதான் சொதப்பல்
திப்பு சுல்தான் வழியில் போராடுவோம் என்கின்றார்
மனிதர் அறிவு அவ்வளவுதான் அல்லது அவருக்கு துண்டு சீட்டு எழுதிகொடுப்பவன் சரியில்லை
திப்பு வெள்ளையனோடு நேரடி போர் நடத்தினார் வீழ்ந்தார் அவருக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்?
இஸ்லாமிய பேரரசன் தைமூர், நாதிர்ஷா, கஜினி, முகமது கோரி என சொனால் ஒரு நியாயம் ஆனால் அவர்கள் இன்றைய பாகிஸ்தானான அன்றைய இந்தியாவினை போட்டு அடித்தவர்கள்
அதனால் அவர்கள் பெயரை தவிர்த்துவிட்டு இந்தியாவில் தீரமிக்க இஸ்லாமிய மன்னனை தேடியிருக்கின்றார்
ஆற்காடு நவாப், ஐதர்பாத் நிஜாம், வங்கத்து உத்தவ்லா எல்லாம் வெத்துவேட்டுகள் என்பது தெரிந்திருக்கின்றது
இதனால் திப்புசுல்தான் வழி என சொல்லிவிட்டார், ஒருவேளை திப்பு போல ஏவுகனை தாக்குதல் நடத்துவாரோ?
இம்ரான்கான் திப்புவழி என சொன்னது நமது காங்கிரஸ் திராவிட தமிழ்தேசிய இம்ரான் ரசிகர்களுக்கு தெரியாது போலிருக்கின்றது
தெரிந்தால் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை சீமை படத்து சிடியினை உடனே அனுப்பி வைப்பார்கள்
கமலஹாசனுக்கு தெரிந்தால் மருதநாயகம் கதை சொல்ல லாகூருக்கே ஓடிவிடுவார்