இம்ரான்கான் புலம்ப ஆரம்பித்திருக்கின்றார்
அமெரிக்கா சென்றிருக்கும் இம்ரான்கான் வெள்ளை மாளிகை முன் நின்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றார்
அவர் புலம்பிய புலம்பலில் அவருக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் உள்ள மோதல் உலகிற்கு தெரியவந்திருக்கின்றது
முதன் முதலாக பாகிஸ்தானின் பிரதமர் ஒருவர் பின்லேடனை அமெரிக்காவிடம் காட்டி கொடுத்தது ஐ.எஸ்.ஐ என சொல்லியிருப்பது பலத்த அதிர்வுகளை அமெரிக்காவுக்கு வெளியே ஏற்படுத்தியிருகின்றது
அதாவது சி.ஐ.ஏவுக்கு முழு ஜாதகமும் தெரியும் என்பதால் அவர்கள் “ஆஹான்” என்பதோடு நிறுத்தி கொண்டார்கள், மற்ற நாடுகள் வித்தியாசமாக பார்க்கின்றன
விஷயம் இத்தோடு முடியாது, அல் கைதா போன்றவை இனி இம்ரான்கானை பகிரங்கமாக குறிவைக்கும், தாலிபான்கள் தாளித்து எடுக்க நாள் குறிக்கும்
இம்ரான்கான் சொன்னது உண்மையா பொய்யா?
பாதி நிஜம், பாதி பொய்
அதாவது 1996ல் இருந்தே அமெரிக்கா பின்லேடனை கொல்ல தேடியது, கிளிண்டன் காலத்து ஏவுகனை வீச்சில் அவன் தப்பினான்
பின் 2001ல் அந்த நியூயார்க் தாக்குதலுக்கு பின் புஷ் மிக கடுமையாக தேடினார், ஆப்கன் குகைகளில் பின்லேடனை கொல்ல சிறியரக அணு ஆயுதம் வரை வீசபட்டது அல்லது சோதிக்கபட்டது
ஆனால் பின்லேடன் எங்கிருந்தார் என்றால் 2002லே அவர் பாகிஸ்தானுக்கு வந்தார், ஐ.எஸ்.ஐ அவரை பொன் போல பாதுகாத்தது
அதாவது அமெரிக்காவுக்கும் பின்லேடனுக்கும் அது இரட்டைஉளவாளியாய் இருந்தது
பாகிஸ்தான் ராணுவ செல்வாக்கு பகுதியில் பின்லேடன் கொல்லபட்டதே அவனுக்கு பாகிஸ்தான் கொடுத்திருந்த்த பாதுகாப்புக்கு சான்று
உண்மையில் ஐ.எஸ்.ஐ பின்லேடனை காட்டி கொடுத்ததா என்றால் இல்லை
சி.ஐ.ஏ 10 வருடமாக தேடியது, பின்லேடன் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தூர எறிந்துவிட்டு காகிதம் போன்ற தகவல் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றான் என்பதே பின்னர்தான் புரிந்தது
அமெரிக்க தொண்டு நிறுவணம் எனும் சி.ஐ.ஏ முகம் ஆப்கன் தகவலை அடுத்து பாகிஸ்தானில் பின்லேடன் இருக்கலாம் என கடுமையாக தேடியது
அப்பொழுது பெண் உளவாளி இறக்கபட்டார், அவர்தான் எல்லோருக்கும் ரத்த பரிசோதனை என சொல்லி அட்டோபாத்தில் இருந்த பின்லேடன் மகனுக்கும் பரிசோதனை செய்து விஷயத்தை உறுதிபடுத்தினார்
அந்த உளவாளி அமெரிக்க பெண் அல்ல, அரேபியாவினை சேர்ந்த சிஐஏவின் உருவாக்கம் என்பார்கள்
எப்படியோ பின்லேடன் மனைவியுடன் நெருக்கமாகி ஆனால் பின்லேடன் பற்றி ஒரு விஷயமும் கேட்காமல் ரத்த மாதிரிகளை கொண்டே பின்லேடனை வளைத்தார்கள்
இன்னும் பல தகவல்கள் கிடைத்தபின் ஒரு அசுப இரவில் சத்த்மில்லா ஹெலிகாப்டரில் வந்து தூக்கினார்கள்
உண்மையில் ஐ.எஸ்.ஐக்கு விஷயம் தெரியாமல் அமெரிக்கா செய்த ஆப்பரேஷன் அது
விஷயம் இப்படி இருக்க, இம்ரான்கான் அனுதாபம் தேட அமெரிக்காவில் புலம்பிகொண்டிருக்கின்றார்
இனி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சும்மா விடாது, அல் கய்தா போன்றவையும் விடாது
ஒருவேளை இம்ரான்கான் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரும் முடிவில் இருப்பாரோ என்னமோ? இல்லாவிட்டால் இப்படி எல்லாம் சொல்ல வாய்ப்பே இல்லை..
