இரண்டாம் முறை சரியான ராகுகாலத்தில் பதவியேற்றாரோ என்னமோ?

சவுதி அரோம்கோ எண்ணெய் வயலும் அதை தொடர்ந்த சுத்திகரிப்பு நிலையமும் தாக்கபட்டதில் தன் அனுதின உற்பத்தியான 7 பில்லியன் டாலரில் கிட்டதட்ட‌ 4 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் நிறுத்தம் என சொல்லிவிட்டது சவுதி

இது சவுதியின் தினசரி தயாரிப்பில் 50%

இந்த நிறுத்தம் கடும் பாதிப்பினை ஏற்படுத்த கூடும், எண்ணெய் விலை கடுமையாக உயரலாம்

எனினும் தன் அவசரகால சேமிப்பில் இருந்து சரக்கினை விற்று நிலமையினை சீர்படுத்தமுடியும் என சவுதி சொன்னாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை

ரஷ்யாவும் அமெரிக்காவும் அவசரசேமிப்பினை வெளியிட தயார் என சொன்னாலும் அளவினை சொல்லவில்லை

சவுதியின் எண்ணை ஆசிய நாடுகளை இயங்க செய்த விஷயம்

ஈராக்கின் எண்ணெய் அமெரிக்க கட்டுப்பாடு, ஈரானில் தடை என்ற நிலையில் சவுதிபெருமானா கச்சா எண்ணெய் அருளை கொடுத்துகொண்டார், அவனையும் ஓட வைத்துவிட்டான் பத்மாசுரன்

இது கடும் விலை உயர்வாக எதிரொலிக்கலாம், நிச்சயம் பெரும் உயர்வு வரலாம் என்கின்றார்கள்

ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தட்டுப்பாடு கூட வரலாம்

ஆக இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் ஆட காத்திருக்கின்றது

எப்படி ஆடும்?

மோடி ஒழிக, நிம்மி மாமி ஒழிக என கும்மியடிக்க ஆரம்பிப்பார்கள்

உள்ளூர் நிலமை மட்டுமல்ல உலக நிலையும் மோடிக்கு சாதகமாக இல்லை

இரண்டாம் முறை சரியான ராகுகாலத்தில் பதவியேற்றாரோ என்னமோ?