இருவரும் ஒரே வீட்டில் இருக்கும்பொழுது எதற்கு கடிதம்?

இந்த ஷோபா சந்திரசேகர் என்பவர் தன் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கின்றாராம்

இருவரும் ஒரே வீட்டில் இருக்கும்பொழுது எதற்கு கடிதம்?

இதை எல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் கருணாநிதியும் தயாளு அம்மாளும் வணங்கதக்க தெய்வங்கள்

அதில் அம்மணி என்ன எழுதியிருக்கின்றது என்றால் “எம்கே தியாகராஜ பாகவதர், ராமசந்திரன், ரஜினி வரிசையில் உன்னை கொண்டாட உலகம் காத்திருக்கின்றது எம்பாவாய்..” என எழுதியிருகின்றது

அம்மணி சூப்பர் ஸ்டார் வரிசை என சொன்னாலும் அந்த முன்சொன்ன மூவருக்கும் இன்னொரு பரிதாப வரிசையும் உண்டு

பாகவதர் 49 வயதிலே மார்க்கெட் இழந்து சொத்து இழந்து குருடனாக திருச்சியில் செத்தார்

ராமசந்திரன் கடைசி 7 வருடம் மிகபெரும் உடல்நலத்தில் சிக்கி ஒருபக்கம் கருணாநிதியிடம் சிக்கி இன்னொருபுறம் இந்திரா ரஜிவிடம் சிக்கி இன்னொருபக்கம் ஜாணகி மற்றும் ஜெயாவிடம் சிக்கி..

அய்யகோ பரிதாபம்

கிட்னி இழந்து டயாலிஸ் செய்து பல்செட் மாட்டி , தொப்பி மாட்டி , மேக் அப் போட்டு.. ச்சே ச்சே எவ்வளவு சித்திரவதை?

ரஜினி சொல்லவே வேண்டாம், மனைவி மகள் என ஏக சங்கிலி அதை தாண்டி சம்மட்டியுடன் சிலரும், இவரை கட்டி தூக்க வேண்டும் என வலை சகிதம் சிலரும் அலைகின்றனர்

இரு வருடம் முன்பு மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பினார் ரஜினி

ஆக 2 பேர் நிம்மதியின்றி செத்து இன்னொருவர் நிம்மதிக்காக மலை மலையாய் அலையும் வரிசையில் விஜயும் வரவேண்டுமாம்

நிச்சயம் நல்ல தாய் உள்ளம் இப்படி நினைக்காது

ஒருவேளை வளர்ப்பு தாயாக இருக்குமோ?