இருவர் அதிகாரம்
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்.
நிறைந்த வலிமையைப் பெற்று மாறுபாடுகொண்டுளவாகிய இரண்டு காளைகள் ஒரு நீர்த்துறையில் ஒன்றாக மேயுமோ? ஒன்றாக தண்ணீர் உண்ணுமோ? உண்ணாது ,
அது போல மாறுபாடு கொண்ட இருவர் அதிகாரத்தில் ஒற்றுமையாக இருக்க முடியாது
(ஆனால் இரு காளைகளையும் அடக்கி வண்டியில் பூட்டும் வல்லமை கொண்ட ஒருவன் முன்னால் அவை அடங்கி வண்டி இழுக்கும்)