இரு ஆலயங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவை
நாம் பார்த்தவகையில் இரு ஆலயங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவைஒன்று மலேசிய பத்துமலை முருகன் ஆலயம் , அங்கு எல்லா நாட்டவரும் வருவார்கள் அதில் எல்லா மதத்தாரும் இருப்பார்கள்ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் சில நாட்டு இஸ்லாமியரும் கூட அதில் உண்டுஅதே போன்ற சாயல் கொண்டது வேளாங்கண்ணி ஆலயம், எல்லா மதத்தாரும் கலந்து கொள்வார்கள், இஸ்லாமியரை நாம் காணும் ஒரே கிறிஸ்தவ ஆலயம் அதுதான்எனினும் வேளாங்கண்ணி மாதாவின் சொரூபத்தை காணும் பொழுது சில கேள்விகள் எழும்புனிதமான தேவமாதா உலகெல்லாம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் காட்சி கொடுத்திருப்பதாக கத்தோலிக பீடம் ஆவணபடுத்துகின்றதுஅதில் லூர்து, பாத்திமா,எஸ்கலின் என ஏகபட்ட இடங்கள் உண்டுஅதிலெல்லாம் மாதா தனியாகத்தான் காட்சி கொடுப்பார்கள், கையில் குழந்தை என்பது இருக்காதுவெளிநாட்டு மாதாக்களில் கையில் மாதாவின் படம் இருப்பது சகாயமாதா எனப்படும் ரஷ்ய மாதாவே, ஆம் அந்த சாயல் ரஷ்ய மாந்தருடையது
அதுவும் காட்சி கொடுக்கவில்லை, வரையும் பொழுது அப்படி வரைந்தார்கள்
ஆக உலகெல்லாம் தனிநபராக காட்சி கொடுத்த மாதா, தமிழகத்தின் வடக்கன்குளம் மற்றும் கள்ளிகுளத்தில் கூட தனியாகத்தான் காட்சி கொடுத்தார்கள்இது கொஞ்சம் ஆழமாக நோக்க வேண்டிய விஷயம்பொதுவாக கையில் குழந்தையுடன் காட்சி கொடுப்பது இந்து தெய்வங்களின் சாயலேபார்வதி முதல் இசக்கி அம்மன் வரை அப்படித்தான் வருவார்கள், வேறேந்த மதத்திலும் யாரும் அப்படி இல்லைமற்ற இடங்களிலெல்லாம் தனியாக வந்த மாதா வேளாங்கண்ணியில் மட்டும் குழந்தையோடும் வந்திருகின்றார்இதெல்லாம் என்னவகை தொடர்பு என நம் சிற்றறிவுக்கு எட்டவில்லைகையில் குழந்தையுடன் வந்த பெண் அக்குழந்தைக்கு பால் கேட்டார் எனும் கதையும், கையில் குழந்தையுடன் வந்த பெண் மோர்கார சிறுவனை நடக்க வைத்தார் என்பது அந்தஆலயத்து வரலாறுஆக கையில் குழந்தையொடு வந்த தெய்வம் அங்கு ஆலயம் கட்டி அமர்ந்திருக்கின்றது, வருவோர் போவோர் எல்லோரையும் காத்திருகின்றது போர்த்துகீச்யர் உட்படஅவர்கள் கொண்டாடி பிரபலபடுத்திவிட்டார்கள்மதுரை அம்மன் கூட ஒரு வெள்ளை கலெக்டரை இடியில் இருந்து வந்து காத்தது என்பது வரலாறு, ஆனால் அவர் மீனாட்சியினை மீனாட்சியாக மட்டும் கண்டார்ஆக வேளாங்கண்ணி மாதாவினை நினைக்கும் பொழுது அதன் சாயல் மற்ற இந்து தெய்வங்களோடு ஒரளவு பொருந்துவது புரியும்எந்த தெய்வமாக இருந்தால் என்ன? தன்னை நம்பிவரும் ஒவ்வொருவரையும் மதம் இனம் மொழி நாடு என வித்தியாசம் பார்க்காமல் நலமும் வளமும் அருளி காக்கின்றது அந்த தெய்வம்அது ஒன்று போதும், வேறு ஆராய்ச்சி எதுவும் தேவையே இல்லை