இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம்

1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரியும் பொழுது செய்த ஒப்பந்தங்கள் பல உண்டு, நதிநீர் பகிர்வு உட்பட ஏராளம்

அதில் மகா முக்கிய ஒப்பந்தம் பாகிஸ்தான் அதாவது மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானான வங்கதேசம் ஆகியவற்றில் இஸ்லாம் தவிர பிற மதத்தவர் சிறுபான்மையினர் இந்தியா வரலாம் குடியேறலாம் தடையில்லை

அப்படியே இந்தியாவில் இந்து தவிர குறிப்பாக இஸ்லாமியர் சிறுபான்மையினர் அவர்கள் விரும்பினால் தாராளமாக இரு பாகிஸ்தானுக்கும் செல்லலாம்

இது இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம், அதில் இருநாட்டின் சிறுபான்மையினரும் எதிர் நாட்டில் பெரும்பான்மையினர் என்பதால் ஏற்கலாம் என்றார்கள்

அதாவது உன் இனத்தோடு போ என்பது போன்ற வரி அது

அதே நேரம் இரு நாட்டில் சிறுபான்மையினரை இரு நாடுமே ஏற்க விரும்பவில்லை, இந்தியாவில் இருந்து இந்துக்கள் வந்தால் பாகிஸ்தானில் இந்து மெஜாரிட்டி அதிகரிக்கும் என பாகிஸ்தான் அஞ்சியது

இந்தியாவும் இஸ்லாமியரை ஏற்க விரும்பவில்லை, அதை காந்தியும் நேருவும் ரகசியமாக செய்தார்கள், பலுசிஸ்தான் இன்றளவும் பாகிஸ்தானில் இருக்க அதுதான் காரணம்

மதவாதத்தை நேரு முகமூடி போட்டு செய்துதான் கபார்கானை கைவிட்டார், ஆம் அதெல்லாம் வரலாற்றில் வராது

இந்தியா இன்றளவும் 1947 ஒப்பந்தத்தை மதித்து வருகின்றது, இந்த நதிநீர் ஒப்பந்தத்தில் மாற்றமில்லை

அப்படியேதான் பாகிஸ்தானில் (வங்கதேசம் உட்பட) இருந்து வரும் சிறுபான்மையினருக்கு ஆதரவு உண்டு என்பதை அப்படியே பின்பற்றுகின்றது

இந்த‌ குடியுரிமை மசோதா கூட அந்த 1947 ஒப்பந்தபடியேதான் இருக்கின்றது, பாகிஸ்தானில் இருந்து சிறுபான்மையினர் மட்டுமே வர அந்த ஒப்பந்தம் அனுமதிக்கின்றது

இந்த அரசும் அதைத்தான் செய்கின்றது

ஆக காந்தியும் நேருவும் செய்தால் சரி அது நாட்டுபற்று

அதையே பாஜகவின் அமித்ஷா செய்தால் மதவெறி

அவனுகளும் அவனுக நியாயமும்