இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடம் சில அரசியல் குறியீடுகளை சொல்லும்
பொதுவாக இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடம் சில அரசியல் குறியீடுகளை சொல்லும்
அமெரிக்காவின் கேம்ப் டேவிட் அப்படிபட்டது, தாவீது முகாமில் அமெரிக்க அதிபர் யாரையாவது சந்தித்தால் விஷயம் இஸ்ரேலுக்கு சாதகம் எனபொருள்
வாஷிங்டனில் சந்திக்கும் சந்திப்பு அரசியல் என்றும், நியூயார்க் சந்திப்பு வர்த்தக பயன்பாடுஎன்பதும் அமெரிக்க குறியீடு என்பார்கள்
ரஷ்யா பொதுவாக மாஸ்கோவில்தான் சந்திப்பு நடத்தும், ஆசிய விவகாரங்களை முன்பு தாஷ்கண்டில் நடத்துவார்கள் காரணம் அது தைமூரின் பூமி, இந்தியா மற்றும் அரேபியாவினை மிரட்டிய மன்னன் அவன், ஆசிய தாதா
உஸ்பெக் பிரிந்தபின் சகலமும் மாஸ்கோ மட்டுமே
அப்படிபட்ட ரஷ்யா திடீரென தன் முக்கிய மாநாட்டை விலாடிவிஸ்டோக் நகரில் அதுவும் கிழக்கில் நடத்துவது பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு கொடுக்கின்றது
அதாவது 1900 வரை ரஷ்யா பின் தங்கிய நாடே, செங்கிஸ்கான் தொடங்கி நெப்போலியன் ஜப்பான் வரை போட்டு அடியோ அடி என அடித்தார்கள்
ஏன் ரஷ்யாவின் பகுதியான அலாஸ்கா கூட அமெரிக்காவுக்கு விற்கபட்டது
அவர்கள் எழுச்சி ரஷ்ய புரட்சிக்கு பின் வந்தது இரண்டாம் உலகபோருக்கு பின் சிகப்பு பட்டையுடன் ரெவிடியானவர்கள் மங்கோலியாவினை மிரட்டி அடக்கி பழிவாங்கினார்கள்,சீனாவினை தட்டி வைத்தார்கள்
ஜப்பானை மிரட்ட இந்த நகரில் பெரும் கடற்படை தளம் அமைத்தாரகள் அதிலிருந்து கொரிய போர் நடத்தினார்கள், வியட்நாம் யுத்தம் உட்பட பல விஷயங்களில் பின்னால் இருந்தார்கள்
மாவோ கொஞ்சம் ஆடியபொழுது அதிலிருந்தே அடக்கி வைத்தார்கள்
சோவியத்தின் மிகபெரும் கோட்டையாக அந்நகர் இருந்தது பின்பு அது உடைந்ததும் ரஷ்யாவின் மர்ம நகரமானது சோவியத்தின் அணுகுண்டெல்லாம் இங்குதான் புதைக்கபட்டது என்றார் எல்ட்சின்
இன்று ரஷ்யாவின் மிகபெரும் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடற்படை தளம் அது
மிகபெரும் பாதுகாப்பு கோட்டையும் கூட, ஜிபிஎஸ் வைத்தெல்லாம் ஏவுகனை கூடஅதை நெருங்க முடியாது
அப்படிபட்ட நகரில் அதாவது சோவியத் காலத்தில் உலகை மிரட்டிய நகரில் இன்று மறுபடியும் கூட்டத்தை நடத்தி உலகுக்கு ஏதோ சொல்கின்றார் புட்டீன்
அதை மோடியும் தலையினை ஆட்டி ஆமோதிக்கின்றார்
தென் கொரியா, ஜப்பான், தைவான் என அமெரிக்க பிடி இருக்கும் பகுதியில் சீனாவும் அடிக்கடி ஆடும் பகுதியில் நாமும் இருக்கின்றோம் மறக்க வேண்டாம் என பழைய ரவுடி திரும்பியது போல் திரும்பியிருகின்றது ரஷ்யா
அதாவது மேற்கு பகுதியில் ரஷ்யாவினை அன்மித்த போலந்து போன்ற நாடுகளில் அமெரிக்கா கால் பதிக்கும் பொழுது இந்த எல்லையில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதியினை மிரட்ட முடியும்
அதைத்தான் இப்பொழுது உலகுக்கு சொல்கின்றது ரஷ்யா
“ஏ அமெரிக்காவே என் மேற்கு பக்கம் நீ வந்தால் உன் எல்லையின் மேற்கு பக்கம் நானும் வருவேன் அதனால் அடங்கு”
எதையுமே நமக்கு சாதகமாக பயன்படுத்துவதுதான் நம் வெற்றி
இந்தியாவும் இந்த சந்தடி சாக்கில் சீனாவின் கடற்பரப்பில் கப்பல் விட்டு, “ஒழுங்கா வழிவிடு.. ரஷ்யா போறோம்” என அட்டகாசம் செய்ய வாய்ப்பு ரெடி.
நடக்கும் காட்சிகளை உன்னிப்பாக கவனிக்கின்றது அமெரிக்கா
அங்கு டிரம்புக்கு கையில் சாக்ஸ் எல்லாம் மாட்டி கை சூப்பும் குழந்தையினை பார்ப்பது போல் கடும் எச்சரிக்கையாக பார்த்து கொண்டிருக்கின்றது வெள்ளை மாளிகை
ஆம் இல்லையென்றால் டிவிட்டரில் ஏதாவது சொல்லிவிடுவார் அது சிக்கலாகிவிடும் அல்லவா? அதனால்தான்
