இரு நாளாக ஏன் அமைதி?
இலங்கை தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுவிட்டது, சரி இரு நாளாக ஏன் அமைதி? எதற்கு தாமதம் என்ற கேள்விக்கு பதில் இல்லை
வழக்கமாக ஒரு தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் பொழுது இதோ காபீரை கொன்ற போராளி என சில படங்களை ஐ.எஸ் வெளியிடும் அது இம்முறை இல்லை
ஐ.எஸ் இருக்கின்றதே அது ஒரு தியாக தீப அமைப்பு, பல பழிகளை தானே ஏற்றுகொண்டு பலரை காப்பாற்றும்.
அப்படி இப்பொழுது சிரியா பக்கம் வனாந்தரத்தில் பரிதாபமாக அலையும் அந்த அமைப்பு யாருக்காகவோ பழி ஏற்றுவிட்டது
ஆம் அவர்கள் எதிரி அமெரிக்காவும் ரஷ்யாவும் இஸ்ரேலும் சவுதியும் எனும்பொழுது கொழும்பில் சிங்களரை தமிழரை கொஞ்சம் வெளிநாட்டவரை கொல்வது ஏன்?
அட அமெரிக்க ரஷ்ய தூதரகம் கூட பட்டியலில் இல்லை மாறாக இந்திய தூதரகம் இருக்கின்றது
இதனால் அடித்து சொல்லலாம் ஐ.எஸ் தியாகி ஆகி யாரையோ காப்பாற்றிற்று
இந்த தற்கொலை தாக்குதல் 8 இடங்களில் நடந்ததில் 3 பேர் ஒரே குடும்பமாம், ஒரு பெண்ணும் உண்டு. மீதி 5 பேர் பங்காளிகளாக இருக்கலாம்
கொலைகார குடும்பம் போலிருக்கின்றது
இதில் உள்ளூர ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்து கொண்டு வருவது சாட்சாத் அமெரிக்கா, ஐ.எஸ் இயக்கத்தை அழிக்கும் ஒரே சக்தி நான் என சொல்லும் அந்த நாடு இனி இலங்கையினை காப்பாற்ற போகின்றேன் என அங்கு காலூன்றும்
அவர்களுக்கு ஒரு பிடி கிடைத்தாயிற்று.
இது ஐ.எஸ் இயக்க தாக்குதல் அல்லவா? பின் எப்படி தமிழகம் தப்பித்தது? இந்தியா எப்படி தப்பித்தது என நீங்கள் கேட்கலாம்
ஆதாரம் இதோ
அதாவது ஏப்ரல் 11ம் தேதி இலங்கை காவல்துறை அனுப்பிய ரகசிய அறிக்கையில் இருக்கும் தகவல் இப்படி சொல்கின்றது
“சில கத்தோலிக்க ஆலயங்களும் கூடவே இந்திய தூதரகமும் தாக்கபடலாம், சந்தேகபட்ட நபர்கள் தேசிய தவுபிக் ஜமாத்தை சேர்ந்தவர்கள்..”
இது போக இன்னும் பல தகவல்களை சொல்கின்றது அந்த அறிக்கை, ஆச்சரியமாக தாக்குதல் நடத்தபோகின்றவர் பெயரையும் சொல்கின்றது
இலங்கை அரசு அதற்கு செவிமடுக்காமல் இருந்தற்கு நேற்று மன்னிப்பு கோரியது
விஷயம் இதுதான்
இலங்கையிலும் தமிழகத்திலும் மாபெரும் அழிவினை செய்து சந்தடி சாக்கில் இந்திய தூதரகம் உட்பட பல இடங்களை குறிவைத்திருக்கின்றார்கள்
இந்தியா தன்னை காத்து கொண்டது, ஆனால் இலங்கை பெரும் அலட்சியமாக இருந்துவிட்டது
அதற்கான விலையினை கொடுத்தாயிற்று
இது ஐ.எஸ் இயக்கத்து வேலை அல்ல, மாறாக பழைய ரவுடியினை பொறுப்பேற்க வைத்து வழக்கினை முடித்துவிட்டார்கள்
உண்மையான சூத்திரதாரி யாரென எல்லோருக்கும் தெரிந்தாலும் அரசியல் காரணங்களுக்காக எல்லோரும் அமைதி
இது நியூசிலாந்துக்கு எதிரான தாக்குதல் என சொல்லபட்டால் இந்திய தூதரகத்துக்கு குறி ஏன்?
ஆக இந்தியாமேல் வன்மம் கொண்ட, அதுவும் இந்தியாவால் முதுகில் டின் கட்டபட்ட ஒரு சக்தி ஒன்று களத்தில் இருந்திருக்கின்றது அல்லவா?
அதுவும் புல்வாமாவினை தொடர்ந்து இந்தியா எல்லைதாண்டி அடித்தபின் குறிவைத்திருகின்றார்கள் அல்லவா?
இனி இது என்னவகை என நீங்களே புரிந்துகொள்வீர்கள்
மோடி அரசின் பலமான நடவடிக்கையும், இந்திய உளவுதுறையின் துல்லியமான நடவடிக்கையும் தமிழகத்தை காத்திருக்கின்றன
இதற்கு நாம் நன்றி சொல்லி தீரவேண்டும் , எமக்கு நன்றி இருப்பதால் சொல்லிவிட்டோம்
விஷயம் இத்தோடு முடியாது, நிச்சயம் அவர்கள் முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள் நாம் வழக்கம் போல விழிப்பாய் இருத்தல் வேண்டும்.