இறங்கிவிட்டது இஸ்ரேல்
முழு போருக்கான ஆயத்த வேலை அல்லது ஆபத்தை தடுக்கும் முயற்சிகளில் இறங்கிவிட்டது இஸ்ரேல்
அதாவது எந்நேரமும் ஈரான் அமெரிக்க போர் தொடங்கலாம், அப்படி தொடங்கும் பட்சத்தில் ஈரானின் குறி அமெரிக்கா அல்ல இஸ்ரேல் என்பது அதற்கு நன்கு தெரிந்த விஷயம்
நிச்சயம் ஈரானின் விமானமோ ஏவுகனையோ கப்பலோ நீர்மூழ்கியினை தாக்கினால் இஸ்ரேலால் சமாளிக்கலாம் காரணம் ஈரான் தொலைவில் இருக்கும் நாடு
ஆனால் உண்மையான ஆபத்து இஸ்ரேலை அடுத்திருக்கும் சிரியா ஈராக் மற்றும் லெபனானில் இருக்கும் ஈரானியஆதரவு இயக்கம்
ஆம் அவைகள் பெருமளவில் ஆயுதங்களை குவிக்கின்றன, பல முன்னேற்பாடுகளை செய்கின்றன ஒரு முழு யுத்தத்துக்கு தயாராகின்றன என்பதை யூகித்தது இஸ்ரேல்
அவர்களின் உளவுபடை கொடுத்த துல்லிய தகவல் அது
என்னதான் இஸ்ரேலில் அரசியல் குழப்பம் என்றாலும் அவர்களின் உளவு மற்றும் ராணுவ உலகமே தனி
போர் தொடங்கினால் ஈரானை சமாளிக்கலாம் ஆனால் சிரியா லெபனானின் அமைப்புகள் இங்கு தொல்லைகொடுக்கும் என கருதும் இஸ்ரேல் இப்பொழுதே அவற்றை துடைதொழிக்க கிளம்பிவிட்டது
முதலில் ஈராக்கிய நிலைகளை தாக்கினார்கள், ஆயுத குடோன் தரைமட்டமானது
இப்பொழுது லெபானின் ஹிஸ்புல்லாவினை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்
முழு அளவிலான யுத்தம் இரு பக்கமும் தொடங்கியிருக்கின்றது, ஹிஸ்புல்லாவினை விட கூடாது என கங்கணம் கட்டி எல்லையில் புகுந்து அடிக்கின்றது இஸ்ரேல்
இஸ்ரேலிய ஆதரவு சன்னி இயக்கங்களும் ஷியா ஹிஸ்புல்லா மேல் பாய்கின்றன
புது பரபரப்பு லெபனான் பக்கம் கிளம்பியிருக்கின்றது, அதில் ஒரு கண் வைத்துகொள்வோம், அவ்வப்போது உங்களுக்கு தகவல் தருவோம்