இறவான்

நாம் முன்பே அறிவாசான் Pa Raghavan எனும் மகா அற்புத எழுத்தாளனின் புதிய நாவல் அதாவது இன்று புத்தக கண்காட்சியில் வரும் புதிய நாவலான “இறவான்” பற்றி சொல்லியிருந்தோம்.

அவர் சில குறிப்புகளை சொன்னபொழுது அது இசையின் அங்கீகாரத்துக்கு ஏங்கும் இசைமேதையின் கதை என்பது லேசாக புரிந்தது

நாம் இது லூசிபரின் சாயல் , ஆம் கடவுளால் ஆசீர்வதிக்கபட்ட இசைதேவதையும் பின்பு அங்கீகாரத்துக்கு ஏங்கி, கடவுளால் புறக்கணிக்கபட்ட அல்லது பொறாமையால் விரட்டபட்ட அந்த லூசிபரின் சாயல் என சொல்லியிருந்தோம்

நிச்சயம் நம் குரு, அதுவும் ராஜகுரு

அவரும் தன் வார்த்தைகளில் அப்படியே இது கடவுளால் ஆசீர்வதிக்கபட்ட சாத்தானின் கதை என அப்படியே எழுதியிருகின்றார்

குருவினை மனமார பின்பற்றினால் அவரின் சிந்தனையில் ஒரு துளி உனக்கும் வரும் என்பது இதேதான்

இந்த இணைப்பு அந்நாவலில் வரும் சில வரிகளோடு ஒரு முன்னொளியினை கொடுக்கின்றது

கேட்டுபாருங்கள், எவ்வளவு தேர்ந்த லாவகமான வரிகள் என்பது புரியும்

தமிழை தவிர இன்னொரு மொழி இந்த அழகிய அனுபவத்தை தராது, அந்த தமிழும் கரங்கள் மூலமன்றி வேறு எதனாலும் தரமுடியாது

சில சுளைகளே இப்படி இருந்தால் அந்த முழு பலாபழம் எப்படி இருக்கும்?

புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக இதை வாங்குங்கள், அக்கதை ஒரு திறமையாளன் அங்கீகாரத்துக்கு ஏங்கிய கதையினை சொல்லும்

அந்த லூசிபரும் கடவுள் முன்னால் ஏங்கிய வலியினை சொல்லும்

கிட்டதட்ட அது அந்த எந்திரன் முதல் பாகத்தில் சிட்டி ரஜினி தன்னை அழித்துகொள்ளும் பொழுது சொன்ன வரியின் வலி

“நானா என்னை படைக்க சொன்னேன்?, நானா எனக்கு உணர்ச்சி கொடுக்க சொன்னேன்?. நானா என்னை இப்படி திறமையாக்க சொன்னேன்?

எல்லாம் நீங்களே செஞ்சிட்டு, இப்போ என்ன அழிஞ்சி போன்னா எப்படி டாக்டர்?”

ஆம், கண்ணீரை வரவழைத்த வரி, ஒவ்வொரு மனிதனும் கடவுளிடம் அனுதினமும் கேட்கும் வலியான வரி

அந்த லூசிபரும் கடவுளிடம் அப்படித்தான் கேட்டான் “இந்த திறமை நீ கொடுத்தும் என்னை ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றாய் ஆண்டவா?

ஒரு திறமையாளனுக்கு சாவை விட கொடுமையானது அவன் திறமையினை பரிகாசம் செய்து அங்கீகாரம் கொடுக்காமல் வதைப்பது..”

ஆம் அந்த முழு வலியான கதையினை ஆசானின் புத்தகத்தில் படித்து பாருங்கள், மாபெரும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்