இலங்கையிலும் விரைவில் அதிபர் தேர்தல்

இலங்கையிலும் விரைவில் அதிபர் தேர்ந்தல் நடக்க இருக்கின்றது, இம்முறை ரனில் , கோத்தபாய பல முகங்கள் களத்திற்கு வரும் போல் தெரிகின்றது

இந்த சிரிசேனா ஆண்டாலும் , புலிகள் புண்ணியத்தில் தலைவன் ராஜபக்சேவுக்கு இன்னும் கனத்த செல்வாக்கு உள்ளது, இலங்கையின் இரும்பு தலைவன் ராஜபக்சே என நம்பும் கூட்டம் அங்கும் உள்ளது

இலங்கையின் தேர்தல் இலங்கைக்கானது மட்டுமல்ல பல வல்லாதிக்க சக்திகளுக்குமானது

அதனால் இலங்கை, சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கையினை மகா உன்னிப்பாக கவனித்து கொண்டிருகின்றது..

அப்படியே அங்கிள் சைமனும் கவனித்துகொண்டிருக்கின்றார் அவரை பொறுத்தவரைக்கும் ராஜபக்சே கோஷ்டி பதவிக்கு வந்தால்தான் அவருக்கு கொண்டாட்டம், அவர்களை காட்டி இங்கு குச்சுபிடி, பரதநாட்டியம் எல்லாம் ஆடலாம்