இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?
இலங்கை தமிழர்கள் பிரச்சினை என எடுத்துகொண்டால் ஈழதமிழர், மலையக தமிழர், இந்த தமிழ்பேசும் இஸ்லாமியர் என மூவரும் கலந்ததே வருவார்கள், தீர்வு இவர்களை உள்ளடக்கியே கொடுக்கபட வேண்டும்
ஆனால் புலிகள் ஈழதமிழருக்கு தனிஈழம் என்ற நிலைபாட்டில் இருந்தனரே தவிர மலையக தமிழர், தமிழ்பேசும் இஸ்லாமியர் எல்லாம் அவர்கள் கணக்கிலே வரவில்லை, ஏன் என்றால் ஈழபோராட்டம் ஈழதமிழனுக்கானது எனும் குறுகிய புத்தி அது
இந்தியா இவர்கள் கலந்த ஈழ சிக்கலுக்கு முடிவினை கொடுக்க விரும்பியது, புலிகள் விரும்பவில்லை. முதல் சிக்கல் இங்குதான் தோன்றிற்று
ஒருவேளை ஈழம் கிடைத்தாலும் மலையக மக்களுக்கோ இல்லை தமிழ்பேசும் இஸ்லாமியருகோ புலிகள் ஆட்சியில் ஒரு பலனும் கிட்டி இருக்காது
இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?
அவர்கள் மூர்ஸ் என அழைக்கபடும் இனம், தமிழ் பேசும் இஸ்லாமியர். தமிழ் பேசிவிட்டால் மட்டும் போதாது, இனம் என்பது வேறு வகை என்பது ஈழகொள்கை அல்லவா?
சிங்களருக்கு இவர்கள் ஆகாது, ஈழத்தவருக்கு அறவே ஆகாது. இலங்கையில் மலையக தமிழருக்கு அடுத்து மிக பரிதாபமனா இனம், ஆனால் உழைக்கும் கடுமையாக உழைக்கும்
கொஞ்சம் தமிழகத்து மார்வாடிகள் போல செழிப்பான இனம்.
ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது இருந்த வெறுப்பினை போலவே, இம்மக்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு வந்தது, சிறுபான்மை சமூகம் வசதியாக வாழ பெரும்பான்மை சமூகம் எங்கும் ஒப்புகொள்வதே இல்லை
வெள்ளையர் காலத்திலே சிங்களர் அவர்களை கொல்வார்கள் , யாழ்பாணர் லண்டனில் சென்று இஸ்லாமியரை கொல்வது கொலை அல்ல என வாதிட்டு வெற்றியும் பெறுவார்கள், அந்த ஈழதமிழனை சிங்களர் தேர் ஏற்றி கொண்டாடுவார்கள்
அதன் பின் ஈழனும், சிங்களனும் அவர்களை போட்டு சாத்துவான்.
இப்படிபட்ட மூர்ஸ் இனம், யுத்தகாலத்திலும் கடும் பாடுபட்டது. வடக்கு கிழக்கினை இணைக்கும் இந்திய ஒப்பந்தத்தை புலிகள் எதிர்க்க பெரும் காரணமே அங்கு வாழும் இஸ்லாமியர்தான், இதுதான் முதல்படி.
புலிகள் அமைக்க நினைத்தது தூய்மையான ஈழம், சீமானின் தமிழ்தேசியம் போன்றது. இஸ்லாமிய பெருமக்களோ தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தவர்கள், வலுகட்டாயமான காலத்தில் புலிகளுக்கு வரியும் கட்டினார்கள்,புலிகளுக்கு போதாதல்லவா?
அது அமைதிபடை வெளியேறிய 1990ம் ஆண்டு காலங்கள், புலிகளின் ஏகபோகம் உச்சகாலங்கள்.
நமது பக்கத்தின் சுடலை ஆண்டவருக்கு குடும்பத்தில் ஒரு கடா வெட்டுவார்கள், அல்லது சுடலை விடமாட்டார். அப்படி ஈழத்தில் குடும்பத்தில் ஒருவரை பிரபாகரனுக்கு பலிகொடுக்க வேண்டும் கூடவே அள்ளியும் கொடுக்கவேண்டும் இல்லாவிட்டால் சாமி விடமாட்டார்.
அப்படிபட்ட சாமிக்கு இஸ்லாமியர் கிள்ளிகொடுப்பது பிடிக்கவில்லை, துரோகிகள் என அறிவித்தார். துரோகிகளுக்கு புலிகளின் தண்டனை கொலை. அப்படி கிழக்கு மாகாணத்தில் புலிகளின் அட்டகாசம் தொடங்கியது
இஸ்லாமியர் கையில் ரூ.500 பணம் மட்டும் கொண்டு செல்லலாம் என அறிவித்தார்கள், நகைகளை வாகனங்களை தொட கூடாது, பலர் கிளம்பினர், கொஞ்சம் பேர் இருந்து பார்க்கலாம் என இருந்த இஸ்லாமியர் மீது பிரபா சாமி நெற்றிகண் திறந்தது, சுடலை வாள் வீசிற்று
இதே ஆகஸ்ட் 3
ஏறாவூரில் கொல்லபட்டதில் 10 வயதிற்குட்பட சிறுவர்கள் உண்டு,காத்தன்குடி பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த இஸ்லாமியரை மசூதிக்குள் புகுந்து வெட்டினர், கிட்டதட்ட 90 இஸ்லாமியர் என புலிகளே சொன்னால் கணக்கு 500க்கு மேல் இருக்கலாம் என்பது ஒரு தியரி, இன்றுவரை தெரியாது
புனிதமான மசூதி அன்று ரத்தகாடாயிற்று, குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.
வரலாற்றில் ஐஎஸ் இயக்கத்திற்கு முன்னோடியாக அந்த காட்டுமிராண்டி தனத்தை நிகழ்த்தியது புலிகள்.
அம்மக்கள் காலம் காலமாய் வாழ்ந்த இடத்திலிருந்து அவர்களை விரட்ட புலிகளுக்கு என்ன உரிமை? யார் கொடுத்தது?
யார் காப்பாற்றுவார்? சிங்களம் வராது, இந்தியா வராது, யாரும் வரமாட்டார்கள், அது புலிகள் துரோகிகளுக்கு கொடுத்த தண்டனை,
ஆனால் முள்ளிவாய்க்கால் உலகமே செய்த இனபடுகொலை அப்படித்தான் நீங்கள் நம்பவேண்டும்.
ஒருவேளை இந்திய அமைதிபடை தொடர்ந்து இருந்திருந்தால் இந்த மாபெரும் அவலம், அநியாயம் நிச்ச்யம் தடுக்கபட்டிருக்கும், இதற்கெல்லாம் இந்தியபடை அனுமதிக்காது.
இதனை எல்லாம் மிக சாதரணமாக கடந்து சென்றன புலிகளின் பிரச்சார ஊடகங்கள், அப்பாவிகளும் நம்பின, ஆனால் சர்வதேசம் குறித்துகொண்டே இருந்தது,
இறுதி யுத்தத்தில் ஈரான் ஓடிவந்து சிங்களனுக்கு உதவ இதுவும் காரணம்.
அப்படி இஸ்லாமிய குடும்பங்களை எல்லாம் விரட்டிவிட்டுத்தான் ஏராளமான தங்கங்களை அபகரித்தார்கள், அவற்றில் ஆயுதம் வாங்கினார்கள், இன்றும் அவர்கள் புதைத்து வைத்த தங்கத்தை தேடித்தான் சிங்களன் அலைகின்றான், கொஞ்சம் மீட்கவும் பட்டது அதனை மறைத்த விஷயம்தான் பொன்சேகா, ராஜபக்சே சண்டையின் முதல்படி
சிங்களனும், புலிகளும் அந்த இஸ்லாமியருக்கு செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை, தொழுகையிலிருந்த அந்த இஸ்லாமியர் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம், அவர்களின் மிக கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி.
1983ல் கொழும்பில் தமிழரை சிங்களன் அடித்து கொன்றதற்கும், 1990ல் புலிகள் இஸ்லாமியரை கொன்று விரட்டி தமிழர் தூய்மை செய்ததற்கும் என்ன வித்தியாசம்?
சிங்களன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், இந்த புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?
இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு, 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் சுட்டுகொல்லபட்டனர், இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் படத்தினை பிடித்து போராட முடியும்?
அப்பொழுதும் இஸ்லாமிய மக்கள் இலங்கையில் என்ன சொன்னார்கள் தெரியுமா? அனுபவமான வார்த்தைகள் அவை
பெரும் கொடுமை நடந்துவிட்டது, இதை எல்லாம் இறைவன் பார்த்துகொண்டிருக்கின்றான், அவன் கணக்கு தப்பாது, பாவிகள் அவனிடம் தப்பமுடியாது
நாங்களும் ஆயுதம் ஏந்தினால் சரி என சொல்கின்றார்கள், அப்படி நாங்கள் ஆசைபட்டால் நொடியில் எங்கள் காலடியில் நவீன ஆயுதங்கள் குவியும் எங்கிருந்தெல்லாமோ வரும்
ஆனால் அது பெரும் அழிவினை தரும், இந்த அழிவினை விட அது பெரும் அழிவினை கொடுக்கும் என்பதால் ஆயுதம் தொடாமல் நகர்கின்றோம்
எப்படிபட்ட வார்த்தைகள், உண்மையான இஸ்லாம் என்பது இதுதான்
இப்படியாக புலிகளின் கோரமுகம் பயங்கரமானது
சபாரத்தினத்தை கொல்ல வேண்டாம் என கலைஞர் கெஞ்சியும் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவனை கொன்றனர் புலிகள்
அமிர்தலிங்கத்து கொலை கலைஞரை அதிர வைத்தது, ராஜிவ் கொலையில் வெலவெலத்தது திமுக
அடுத்து இந்த அப்பாவி இஸ்லாமிய கொலைகளில் பிரபாகரன் இருக்கும் பக்கம் தலைவைத்து படுக்காமல் ஒதுங்கினார் கலைஞர்
ஆக சிங்களம் என இலங்கையிலும், ராஜிவ் கொலை என இந்தியாவுடனும், இஸ்லாமிய கொலை என உலகையும் பகைத்து முள்ளிவாய்க்கால் மக்களோடு அழிந்தனர் புலிகள்
ஆனால் பழிமட்டும் கலைஞர் கெடுத்தார், கலைஞர் துரோகி. பெரும் கொடுமை என்பது இதுதான்
ஆகஸ்ட் 3, புலிகளின் இஸ்லாமிய வெறுப்பினை கொடூரமாக உலகிற்கு சொன்ன நாள், ஹிட்லரின் இனவெறுப்பினை போல புலிகளின் இனவெறுப்பு உலகை மிரட்டிய நாள்
(இப்பொழுதும் வந்து பிரபாகரனை பற்றி உனக்கு தெரியாது, இஸ்லாமியர் எல்லோரும் துரோகிகள், இந்தியபடைக்கு தகவல் சொன்னவர்கள் அதனால்தான் அண்ணன் கொன்றார் என சொல்வார்கள் பாருங்கள், அங்கே தான் பெரும் வெறுப்பும் பரிதாபமும் வரும்)