இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகள்
இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிதரும் 60 ஆயிரம் வீடுகளில் முதல் பகுதி வீடுகள் நேற்று ஈழதமிழர்களுக்கு ஒப்படைக்கபட்டிருக்கின்றன
இதில் நமது பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கெடுத்திருக்கின்றார்
ஈழம் , தொப்புள் கொடி அது இது என கத்தும் கோஷ்டி, இங்கு பிரியாணி அண்டாவும் இசுஸ் காருமாக சுற்றும் கோஷ்டி, ஐரோப்பாவில் தமிழர் பெயரை சொல்லி கறக்கும் கோஷ்டி எல்லாம் ஏதாவது ஈழதமிழருக்கு செய்ததா?
இல்லை ஐரோப்பாவிலும் கனடாவிலும் நியூசிலாந்திலும் இருந்து கொண்டு “சேவ் டமில்” இந்தியா ஒழிக என கத்தும் கும்பல் அவர்களுக்கு ஏதாவது செய்ததா?
சுத்தமாக இல்லை
ஆனால் இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவில் அழிந்த வீடுகளை கட்டி கொடுத்து அம்மக்களை குடி அமர்த்துகின்றது
இந்த திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் அளித்தது காங்கிரஸ் அரசு, ப.சிதம்பரத்தின் பங்கு இதில் அதிகம்
நேற்றுமுதல் அந்த வீடுகள் ஒப்படைக்கபட தொடங்கியாயிற்று, இந்தியா ஈழதமிழருக்கு செய்யும் மிக பெரும் உதவி இது
இந்த ஈழ உணர்வாளர்களில் ஒருவராவது இதற்கு இந்திய அரசிற்கு நன்றி என சொன்னார்களா? ஒருவார்த்தை சொன்னார்களா என்றால் சொல்லமாட்டார்கள்
காரணம் ஈழவிவகாரங்களில் இந்திய அரசு எடுக்கும் எந்த நல்ல முயற்சிகளும் இவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும்
அங்கே அமைதி நிலவுவதையோ, அம்மக்கள் நிம்மதியாக இருப்பதோ இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது
அங்கே அவர்கள் செத்துகொண்டே இருக்கவேண்டும் அதை காட்டி இவர்கள் இங்கு கத்திகொண்டே இருக்கவேண்டும் என்பது இவர்களின் கேடு கெட்ட ஆசை
அவர்கள் அப்படித்தான், அவர்கள் கொடுமதியும் அப்படித்தான்
அழிக்க தெரிந்த, அழிவிற்கு மட்டும் துணைபோகும் கூட்ட்டம் அது, அவற்றிற்கு எதையும் உருவாக்க தெரியாது.
முன்னதாக மலையக மக்களிடம் சென்ற, அவர்களை சந்தித்த இரண்டாம் மிகபெரும் தலைவனாக மோடி அறியபடுகின்றார், அவர்களுக்கு மருத்துவமனை கட்டிகொடுத்தது மோடியின் அரசு
மலையக மக்களை சந்தித்த முதல் உலக தலைவன் யாரென்றால் மாவீரன் சேகுவேரா
மோடியின் சேவை இன்னும் தொடரட்டும், அம்மக்களுக்கு நன்மைகள் பெருகட்டும், அமைதி நிலைக்கட்டும்
இந்திய அரசின் செயல்பாடுகளை நாம் வரவேற்கின்றோம், மோடி அரசு செய்திருக்கும் இந்த மாபெரும் நல்ல விஷயத்திற்காக மோடிக்கு இந்திய தமிழனாக நன்றி தெரிவிக்கின்றோம்.
(இந்த தும்பிகள் இன்னும் வாய்திறக்கவில்லை, “ஏ மானத்திற்கும் வீரத்திற்கும் பெயர் போன தமிழினமே, துரோகி இந்தியா கட்டிதந்த வீட்டில் நீ இருக்கலாமா?
உடனே வெளியேறு, நடுத்தெருவிற்கு வா. அந்த வீட்டில் இருக்காதே” என விரைவில் தும்பி கூட்டம் கத்தினாலும் கத்தும்”
அப்படி கத்தினால் ஈழத்திலிருந்து கள்ளதோணி வழியாகவாவது வந்து அவர்கள் தும்பிகளை பிளந்துவிடுவார்கள்)