இலங்கையில் தாமரை

இந்தியாவின் அரசியல் காட்சிகள் இலங்கையிலும் தொடர்வது ஆச்சரியமா தற்செயலா என தெரியவில்லை

இந்தியாவின் காங்கிரஸ் போல இலங்கையில் ஒரு கூட்டணி உருவானது புலிகளால் கொல்லபட்ட பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாசா ராகுல்காந்தி போல பெரும் கூட்டணியுடன் நின்றார்

கை சின்னத்தில் நின்றார்

இப்பக்கம் கோத்தபாய‌ ராஜபக்சே மோடி அமித்ஷா போல தாமரை சின்னத்தில் நின்றார், அவர் வென்றிருக்கின்றார்

அதே இந்திய தேர்தல் காட்சிகள் அங்கும் அரங்கேறி அசரடிக்கின்றன..

கோத்தபாயாவுக்கு மோடி அவசர வாழ்த்து சொல்லும் பொழுது கவனித்தால் இலங்கையில் தாமரை மலர்ந்திருந்தது

ஆக தமிழிசை அக்கா பாணியில் இப்படி சொல்லலாம்,

“தமிழகத்துக்கு வடக்கேயும் தெற்கேயும் தாமரை மலர்ந்துவிடது, தமிழ்நாட்டிலும் மலர்ந்தே தீரும்”

இதை அமித்ஷா பாணியில் இப்படி சொல்லலாம்

“தமிழகத்துக்கு வடக்கேயும் தெற்கேயும் தாமரை மலர்ந்துவிட்டது, தமிழகத்தில் என்று மலருமோ தெரியாது..”