இலங்கையில் பல நாடுகள் கால்பதிக்க கடும் பிரயத்தனம்
இலங்கையில் பல நாடுகள் கால்பதிக்க கடும் பிரயத்தனம் செய்யும் நிலையில் இந்தியாவும் விட்டுகொடுக்கவில்லை
இந்தியாவுக்கு மிக அண்டை நாடு எனும் முறையில் அதன் ஒத்துழைப்பு மிக அவசியம் என கருதும் இந்தியா , அதை ராஜதந்திர ரீதியாக கையாள்கின்றது
திரிகோணமலையின் ஒரு பகுதியினையும், பலாலி விமான நிலையத்தையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் இந்தியா, ஹம்பாந்தோட்டாவில் சீனாவுக்கு செக் வைத்துவிட்டு இலங்கை ராணுவம் பலம் பெற 350 கோடி அளிக்கின்றது
இது சும்மா கொடுக்கும் பணம் என சொன்னாலும், இதன் மூலம் இந்தியா பெறும் அனுகூலம் ஏராளம் உண்டு
இந்த பணத்தால் இலங்கை தமிழரை தாக்கும் என்றோ, மொத்தமாய் கொல்லும் என்பதெல்லாம் அபத்தம்
இந்தியா கொடுக்காவிட்டால் சீனாவோ அமெரிக்காவோ கொடுப்பார்கள், அப்பொழுதும் இலங்கை அரசு வாங்கும் ஆனால் தமிழரை கொல்லாது
இந்தியாவுக்கு ஏதோ திட்டம் இருக்கின்றது, விரைவில் இந்தியாவின் ரகசிய படைபிரிவு தென்னிலங்கையில் நிறுத்தபடலாம் அதன் முன்னோட்டம் இது என்கின்றார்கள்
நாட்டுக்கு பாதுகாப்பான எல்லா விஷயத்தையும் வரவேற்க வேண்டியது நம் கடமை