இலங்கை குண்டுவெடிப்பு சொல்வது இதுதான்
இலங்கை குண்டுவெடிப்பு சொல்வது இதுதான்
ஒரு நாட்டில் ஆயிரம் சிக்கல் இருக்கலாம் ஆனால் அந்நிய நாட்டினை உள்ளே விட்டால் என்னாகும் என்றால் இப்படித்தான்
அவர்களிடம் சிக்குவது எளிது, மீள்வது கடினம்
இலங்கையினை இந்த நுட்பத்தில் சிக்க வைத்திருந்தது இந்தியா
தன் ராணுவ முகாம் ஆசை பிரேமதாசா + ஆண்டன் பாலசிங்கம் கூட்டணியால் நடக்கவில்லை என்றாலும் அதன் கணக்கு வேறாய் இருந்தது
என்னதான் புலிகளால் இந்தியாவுக்கு பெரும் நஷ்டம் எனினும் கடிநாய் என்றாலும் அது நமக்கு ஒருவிதமான காவல் நாய் என கருதியது இந்தியா
இல்லை என்றால் என்றோ புலிகளை முடித்திருப்பார்கள்
ஜெயவர்த்தனே தொடங்கி பிரேமதாச சந்திரிகா என பலருக்கு அமெரிக்கா சைனா ரஷ்யா என உதவிகேட்டு புலிகளை முடிக்க வெகு நேரமாகி இருக்காது
ஆனால் பின்வரும் விளைவுகளை கணித்து புலிகளை ஒருமாதிரி கையாண்டனர் அந்த ஆட்சியாளர்கள்
ஆனால் மகிந்தா மாறினார், அந்நிய சக்தி கொண்டு புலிகளை துடைத்தொழித்தார்
மிக தைரியமாக புலிகளை ஒழித்தாலும் அந்நாடு அந்நிய கைக்குள் சிக்கிவிட்டது
இலங்கையின் தந்திரம் பெரும் வெற்றி அளிக்கவில்லை
வல்லரசுகளுக்கான அதிகார போட்டியில் ரத்தவெள்ளம் சாதாரணம்
ஒரு நாட்டின் கையிலிருந்து ரத்த வெள்ளத்திலே அதிகாரம் கைமாறும், அது இப்பொழுது கொழும்பிலும் நடந்து கொண்டிருக்கின்றது
இலங்கை ஆட்சியாளார்களில் ஜெயவர்த்தனேவும் பிரேமதாசவும் சந்திர்காவும் கில்லாடிகள்
மகிந்தவுக்கு பத்ம வியூகம் போல நுழைய தெரிந்ததே தவிர வெளிவர தெரியவில்லை
அவர்கள் வரலாற்றை படித்தால் ஜெயவர்த்தனேவும் பிரேமதாசவும் மகா கில்லாடிகள்.