இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது

இலங்கை மறுமுறையும் எரிய தொடங்கிவிட்டது, இம்முறை சிங்களருக்கும் இஸ்லாமியருக்கும் சண்டை

அவர்கள் தமிழ்பேசும் இஸ்லாமியர். ஆனால் தமிழரில் சேரமாட்டார்கள். ஈழதமிழரிடம் கேட்டால் அவர்கள் பாகிஸ்தானிய அனுதாபி என்பார்கள், சரி இந்தியா எதிரி யார்? ராஜிவினை கொன்றது யார்? என கேட்டால் பதில்வராது

இலங்கை சுதந்திரத்திற்கு முன்பு ஈழதமிழரும் சிங்களனும் சேர்ந்து இஸ்லாமிய தமிழனையே அடித்தார்கள்

சுதந்திரத்திற்கு பின் ஈழதமிழனுக்கும் சிங்களனுக்கும் முட்டியது, புலிகள் ஒழிக்கபட்டபின்பு மறுபடியும் சிங்களம் இஸ்லாமியரை உரச ஆரம்பித்தது

பற்பல சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன‌

சிங்கள லாரி ஓட்டுநருக்கும், இஸ்லாமிய இளைஞர்களுக்கும் சண்டை வெடித்தி அதில் இஸ்லாமியர்கள் சிங்களனை தாக்கி அவன் மருத்துவமனையில் உயிரிழந்தபின் வெடித்த கலவரமிது , அது பயங்கரமாக பரவிகொண்டிருக்கின்றது

சிங்கள புத்த இனவாதிகள் வெறியாட்டம் ஆடுகின்றனர். என்றுமே சிங்கள அரசு அவர்கள் வெறியாட்டத்தை தடுக்காது.

இப்பொழுது சிக்கலில் இருப்பவர்களில் தமிழக இன உணர்வாளர்கள் முதலிடம். ஈழதமிழன் தமிழ்பேசுவான் நாங்களும் தமிழ்பேசுவோம் மொழியால் எழுந்த உறவு என சொல்பவர்களை தமிழ்பேசும் இஸ்லாமியர் தாக்கபட்டபொழுது காணவில்லை

அடுத்து திருமா கோஷ்டி

புத்தம் அருமையான மதம், அமைதியான மதம் அம்பேத்கர் அதனை தழுவினார் , நாங்களும் பவுத்தர்கள் என சொல்லும் அந்த கோஷ்டி

பௌத்தன் என்பதால் சிங்களை ஆதரிப்பதா? இல்லை தமிழ்பேசுவதால் இஸ்லாமியனை ஆதரிப்பதா என கலங்கிகொண்டிருக்கின்றது

புத்தம் நல்ல மதமே ஆனால் நல்ல நீர் கலக்கும் இடங்களை பொறுத்து இனிப்போ கசப்போ உப்போ பெறுவது போல இலங்கையிலும் , பர்மாவிலும் கடும் கசப்பை பெற்றிருக்கின்றது

கலவரம் இன்னும் நின்றபாடில்லை. ஆனால் இங்கு ஒரு சத்தமுமில்லை

ஏன் என்றால் அவர்களிடமிருந்து சல்லி காசு வராது.