இலவச திட்டங்களை ஒழிப்போம்
இலவச திட்டங்களை ஒழிப்போம் என சர்க்காரின் ஜெயமோகன் வசனத்தை இந்த விஜயண்ணா பேசிவிட்டார் என ஏக சலசலப்பு, விஷயம் அரசாங்கத்தையே சீண்டிவிட சர்க்கார்க்கு சமாதி கட்ட அரசு கிளம்புவது போல் தெரிகின்றது
ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது , அதாவது வோட்டுக்காக இலவச பொருள் வழங்குகின்றார்கள் , இது லஞ்சம் , ஊழல், கையூட்டு என கிளம்பியாயிற்று
எல்லா இலவச திட்டங்களையும் பழிக்க முடியுமா?
காமராஜரின் இலவச மதிய உணவு திட்டம் என்பது இலவச திட்டம்தான், ஆனால் அது எவ்வளவு பெரிய நல்ல விளைவினை கொடுத்தது, எவ்வளவு பேர் கல்வி கற்றனர்? அதனால் பலன் பெற்றோர் வீட்டிலே உண்டு
உடையே இல்லா ஏழை குழந்தைக்கும் பகட்டில் திரியும் பணக்கார் குழந்தைக்கும் பொதுவாக சீருடை கொடுத்தால் அதை குறை சொல்ல முடியுமா?
நிச்சயம் ஏழைகளுக்கு அது பெரும் விஷயம்
கலைஞரின் இலவச பஸ்பாஸ் திட்டம் என்ன பழிக்க கூடியதா? அதனால் பலன் பெற்றோர் எவ்வளவு
கலைஞரின் இலவச மின்சார திட்டம் என்பது ஒன்றுதான் விவசாயிகளின் ஓரே ஆறுதல், விவசாயம் என்பது அந்த ஒற்றை கயிறில்தான் ஆடிகொண்டிருக்கின்றது
என்னால் மிக உறுதியாக சொல்லமுடியும் மனிதர் மேல் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் விவசாயிகளுக்கான இலவச மின்சாரதிட்டம் மாபெரும் சாதனை
ஏழை குடிசைக்கும், வருமானமில்லா கோவிலுக்கும் இலவச மின்சாரத்தை கொடுத்த கலைஞரை மறக்க முடியுமா?
டிவி கொடுத்தது தவறு என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது, டிவி என்பது என்ன அது ஒரு மீடியா , மின்சார பத்திரிகை
மாணவன் நேசனிலே நாட்டு நடப்பினை எழுதி வீடுவீடாக கொடுத்தவர் கலைஞர், மக்கள் அறிவுபெற வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்தது
அது குடியரசு, திராவிட நாடு, முரசொலி என தொடர்ந்தது அப்படி பத்திரிகையினால் மக்கள் விழிப்புற வேண்டும் என்ற நோக்கில் அதன் விஞ்ஞான வடிவமான டிவியினைத்தான் அவர் வழங்கினார்
அதில் தவறென்ன கண்டார்கள் அதில் என்ன சன்டிவியும், கலைஞ்ர் டிவியும் மட்டுமா தெரியும்? பிபிசி சி.என்.என் கூட தெரியும், டிவிக்கு கட்சி தெரியாது
இன்னுமொரு கூட்டம் கிரைண்டரை உடை, மிக்சியினை உடை என கிளம்பி இருக்கின்றது, இவனெல்லாம் என்றாவது அம்மிகல்லில் அரைத்தானா? இல்லை ஆட்டுகல்லில் மாவாட்டினானா என்றால் இல்லை
அவனை எல்லாம் 4 நாள் அம்மிகல்லில் அரைக்க சொன்னால்தான் அதன் கஷ்டம் புரியும்
வாழ வழியற்ற மக்களுக்கான திட்டம் அது, அன்றாடம் காய்ச்சிகள் ஏழை பாழைகளுக்கான திட்டம் அது, அதில் பெற்ற பொருளை அமெரிக்காவில் இருந்து வந்த கார்பரேட் கிரிமினல் தூக்கி போட்டு உடைத்தால் சனியனை சாத்த வேண்டாமா?
மாணவர்களுக்கான இலவச சைக்கிளும், இலவச லேப்டாப்பும் ஏழைகளாய், ஏழை மாணவர்களாய் இருந்தால் அன்றி புரியாது
நிச்சயம் சொல்லலாம், கலைஞர் ஏழையாக இருந்து ஏழையாகவே வளர்ந்தவர்
அவருக்கு மாணவர் கஷ்டம் புரிந்தது, விவசாயிகள் கஷ்டம் புரிந்தது, அடிமட்ட மக்களின் வறுமை புரிந்தது
ஜெயாவின் திட்டமெல்லாம் கலைஞர் திட்டத்தின் அடுத்த வெர்ஷனே அன்றி சொந்த திட்டம் அல்ல
முத்தாய்ப்பாக கலைஞர் காப்பீடு திட்டம் பற்றி சொல்லலாம், ஆனானபட்ட பணக்கார அமெரிக்காவிலே ஒபாமா கேர் என கொண்டுவரபட்ட மருத்துவ காப்பீடு உண்டு
அதேதான் இங்கும் வந்தது, அதை இலவசம் என தள்ளிவிட முடியுமா?
எத்தனை ஆயிரம் மக்கள் அதனால் பலன்பெற்றார்கள், மறுக்க முடியுமா?
ஆக இலவசத்தால் நாடு கெட்டது என்பவனை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும், அரசு அதற்கு களமிறங்கினால் நல்லது
எவ்வளவு நலிந்தொரும் வாழ வழியற்றோரும் அத்திட்டங்களால் பலன் பெற்றோர் என்பது சமூகத்திற்கு தெரியுமே அன்றி இந்த சினிமா சர்க்காருக்கு தெரியாது
இந்த சர்க்கார் படம் என்பது கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம்
விஜயண்ணா என்பவர் திராவிட கட்சிகளை சரித்துவிட்டு முதல்வராக துடிக்கும் நபர், இவரை குரங்கு போல் ஆட்டி வைப்பவர் அவரின் தகப்பனார் சந்திரசேகர்
வசனம் எழுதி இருப்பவர், திராவிட கட்சிகளை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சீண்டும் இந்த ஜெயமோகன்
பெரியார் புரட்சியாளர் அல்ல,, கலைஞர் எழுத்தாளர் அல்ல, சிவாஜிக்கு நடிக்க தெரியாது, பாரதியார் மகாகவி அல்ல என்றெல்லாம் அரிய கருத்துக்களை சொன்னவர்
அவரும் இவரும் திட்டமிட்டு எழுதிய வசனங்களே இவை என்பதில் மாற்று கருத்தில்லை, இருவரும் சொன்னால் இயக்குநர் முருகதாஸ் என்ன செய்வார்? மிக்ஸி உடைக்க கிளம்பிவிட்டார்
இந்த விஜயண்ணாவிற்கு நாம் சொல்வது ஒன்றுதான், அண்ணா விஜயண்ணா உங்கள் அப்பன் சொல்வதை நம்பாதீர்கள், நம்பினால் ராமசந்திரனுக்கு இணையாக வளர்வேன் என சொல்லி வீணாய் போன முகமுத்து நிலைதான் உங்களுக்கும்
உங்களுக்கெல்லாம் கனவு நாயகன் யார்? சாட்சாத் ராமசந்திரன்
அவர் என்ன கேமரா முன் இருந்துவந்து தனிகட்சி கண்டாரா?
நிச்சயம் இல்லை, அவர் அண்ணாவோடு இருந்தார், திராவிட கட்சியின் முகமாக அறியபட்டார். ராமசந்திரன் கழக நடிகர் என்பதே அவருக்கு முதல் அடையாளம்
ஆம் கட்சியில் ஒருவராக வளர்ந்தவர் அவர், தனியாக அல்ல
பின்னாளில் அவர் கட்சி துவக்கும்பொழுது ஏற்கனவே இருந்த திமுகவினைத்தான் பிரித்து சென்றார் அதுதான் அவர் ஆட்சிக்கு வர எளிதாயிற்று
அவரால் கொண்டுவரபட்ட ஜெயா அதிமுகவின் அஸ்திவாரம் முதல் கைபற்றினர்
திமுக அதிமுக இரண்டும் வலுவாக இருக்க காரணம் அதன் அஸ்திவாரம், அது ஏழைகளாலும் பாட்டாளிகளாலும் மிக வலுவாக போடபட்டது
ஆனால் உங்கள் நிலை என்ன? எந்த கொள்கை? எந்த போராட்டம் அல்லது எந்த தலைவன் பின்னால் அணிவகுதீர்கள் ? எந்த கட்சியில் இருந்தீர்கள்
திடீரென குதித்தால் விஜயகாந்த் போல திடீரென காணாமல் போகவேண்டியதுதான்
ராமசந்திரன் திமுகவில் இருந்ததால்தான் வென்றார், சிவாஜி தன் புகழை மட்டுமே நம்பி தோற்றார்
நிச்சயம் நீர் அரசியலுக்கு வந்தால் சிவாஜி வழிதான் , இல்லை என்றால் விஜயகாந்த் முடிவுதான் சந்தேகமில்லை
அரசியலுக்கு வரும் ஆசை இருந்தால் முதலில் கட்சியில் சேர்ந்து பாடுபடுங்கள், ராமசந்திரன் அதைத்தான் செய்தார்
அவர் நாலுபேரிடம் சொல்ல அவருக்கு நல்ல தலைவன் பெயர் இருந்தது, உங்களுக்கு சொல்ல எந்த தலைவன் பெயர் உண்டு?
முருகதாஸ் பெயரை எல்லாம் சொன்னால் அடித்துவிடுவார்கள்
ராமசந்திரன் என்பவர் திமுகவில் இருந்ததாலதான் வென்றாரே தவிர தனிபட்ட முறையில் கட்சி தொடங்கி அல்ல
மற்ற எந்த நடிகனும் தனியாக கட்சி தொடங்கி இங்கு கிழிக்க முடியாது, சிவாஜியும், பாக்யராஜூம், விஜயகாந்தும் , டி.ராஜேந்திரனும் இன்னும் பலரும் சாட்சிகள்
கொள்கை இல்லா கட்சி அப்படித்தான்
அதனால் சொல்கின்றோம் அரசியல் ஆசை இருந்தால் நல்ல கட்சியாக பார்த்து சேர்ந்து தொண்டு செய்யுங்கள் பாடுபடுங்கள்
இல்லை ஒழுங்காக சினிமாவில் நடித்து உங்கள் காக்கா வலிப்பு ஆட்டத்தையும், வாயே திறக்காமல் வசனம் பேசும் வித்தையினையும், எல்லா காட்சிக்கும் லாரி ஹார்ன் அடித்தாலும் அசரா எருமைமாடு போல இருக்கும் முகபாவத்தையும் காட்டி கொண்டு சினிமாவிலே இருங்கள்
அங்கிள் சைமனுக்கும் சிலர் விசிலடிக்கும்பொழுது உங்களுக்கும் சிலர் கிளம்பமாட்டார்களா?
ஆனானபட்ட சிரஞ்சிவியே போதுமடா சாமி என ஓடிவிட்ட அரசியல் இது
அதனால் வீணாக இங்கு வந்து சிக்கி கொள்ளாதீர்கள், அதற்கு முதலில் செய்ய வேண்டியது உங்கள் அப்பாவினை நல்ல முதியோர் இல்லத்தில் சேர்துவிடுங்கள்
இல்லாவிட்டால் உங்களை யாரும் காப்பாற்ற முடியாது
இன்னொன்று பா.ரஞ்சித் ஒரு தலித் வெறியன் என்றால் ஜெயமோகன் பார்ப்பன வெறியன், இவர்களை போன்றவர்களை பக்கத்திலே விடாதீர்கள்
விட்டால் என்னாகும் என்பதற்கு ரஜினியிடமே கேட்டுகொள்ளுங்கள் அவருக்கு எல்லா வகையிலும் அனுபவம் அதிகம்
ஆக இதை எல்லாம் செய்து, உங்கள் தந்தையினை முதியோர் இல்லத்திற்கு அனுப்பினால் நீங்கள் உருப்பட வாய்ப்பு உண்டு
இல்லாவிட்டால் விழும் ஒவ்வொரு அடியும் தாங்க முடியாது, கண்ணுக்குள் நிலவு படத்தில் உங்கள் பாத்திரம் தெரியுமல்லவா? அப்படி ஆகிவிடும் ஜாக்கிரதை
(இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் விஜயண்ணா, உங்கள் “உன்னால் முடியும்” இயக்கத்தால் உங்கள் பிறந்த நாளில் இலவச தையல் மிஷின், இலவச சைக்கிள், இலவச அயன்பாக்ஸ், இலவச ஜட்டிகள் எல்லாம் வழங்கபடுகின்றதே
உங்கள் தந்தையார் கூட அந்த மேடையில் பெருமை பொங்க அமர்ந்திருப்பாரே
அந்த இலவசத்தை என்றாவது நீர் கண்டித்ததுண்டாண்ணா? மனசாட்சியினை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்..)
[ November 7, 2018 ]
பழைய செய்திகளை புரட்டினால் சில விஷயங்கள் புரியும்
விஜயண்ணா தன் படம் வெற்றி பெற்றால் இயக்குநருக்கு கார் வழங்குவார், அப்படி முருகதாஸ் மற்றும் அட்லி எல்லோரும் பெற்றார்கள்
அதன் பெயர் ஊழல் இல்லை, லஞ்சம் இல்லை அன்பளிப்பு என்பார்கள் தகப்பனும் மகனும்
ஏம்பா முருகதாஸ் அந்த காரை கொழுத்திவிட்டு இலவச மிக்ஸியினை உடைக்க வாருமய்யா, இல்லாவிட்டால் பாட்டாளி மக்கள் கார் உடைக்க வந்தால் என்னய்யா செய்வீர்?
இந்த விஜயண்ணாவின் “உன்னால் முடியும்” இயக்கம் அவர் பிறந்த நாள் அன்று ஊரெல்லாம் நலிந்தோர் நலதிட்ட விழா என நடத்தி இலவச வேட்டி சேலை, தையல்மிஷின் எல்லாம் வழங்குவார்கள்
அணில் குஞ்சுகளா, இனி அந்த இலவச பொருட்களை “விஜயண்ணா பொறந்துடார் டோய்..” என வழங்க வாருங்கள், அன்று இருக்கின்றது
அடிக்கிற அடியில் விஜயண்ணாவிடமே நியாயம் கேட்க செல்வீர்கள்
[ November 8, 2018 ]
“ஆத்தா, உங்க பேரு கோமளவல்லியா ஆத்தா? எங்களுக்கே சொல்லாம மறைச்சிட்டியே ஆத்தா, இப்போதா தெரியுது ஆத்தா..
இந்த அளவுக்கு கூடவா எங்கள மதிக்காம வச்சிருந்த ஆத்தா,
அந்த விஜய் பய சொல்லித்தான் தெரியணுமா ஆத்தா ? ரெம்ப அவமானமா இருக்கு ஆத்தா?”
[ November 8, 2018 ]
============================================================================
சாமியார் என்பது சரியாகத்தான் இருக்கின்றது
60 ஆயிரம் மனைவியரோடு வாழ்வாங்கு வாழ்ந்தவன் பெயரின் மசாஜ் சென்டர் வைக்க வேண்டுமா? மருத்துவ கல்லூரி வைக்க வேண்டுமா?
இந்த சுஸ்சுருதர் போன்ற மருத்துவ முனிவர் பெயரை எல்லாம் வைக்க மாட்டீர்களா சாமி?
இந்த சுக்கிராச்சாரியார் பெயரையாவது வைத்தால் என்ன?
ராமன் பெயரில் என்ன விமான நிலையம்? விமானத்தில் வந்து சீதையினை கடத்தியது ராவணன் அல்லவா? அவன் பெயரை அல்லவா வைக்க வேண்டும், இந்த ஜடாயு பெயருமா இல்லை?
சாமி, விமான நிலையத்திற்கு ராமன் பெயரை வைத்தால், விமானத்தால் மனைவியினை பறிகொடுத்த ராமன் பெயருக்கு இழுக்கு வராதா?
என்னமோ யோசித்து செய்யுங்கள் சாமி..
[ November 8, 2018 ]