இளையவன் என்று இகழ்ந்தால்
“போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னை
நுண்பல் கருமம் நினையாது
இளையன் என்று இகழின்,
பெறல் அரிது ஆடே.”
எதிரிப்டை வீரர்களே கேளுங்கள், சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற வர் எம் தலைவன்,
அவன் செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.