இழப்பு இல்லாமல் யுத்தம் இல்லை

யுத்தம் என வந்தால் எதிரிக்கு 4 குத்து விழுந்தால் நமக்கு ஒரு அடியாவது விழும் என்பது பகவான் கிருஷ்ணனே நடத்திய யுத்தத்தின் தத்துவம்

இழப்பு இல்லாமல் யுத்தம் இல்லை

அப்படி அமெரிக்க சீன, அமெரிக்க ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பானிய வர்த்தக போரில் அமெரிக்காவுக்கும் அடி விழுகின்றது

அமெரிக்க பொருளாதாரம் சரிவதாக புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கின்றன அமெரிக்க பத்திரிகைகள்

அது உண்மையும் கூட, உலகில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் வர்த்தகபோரால் அமெரிக்க பொருளாதரமும் லேசாக ஆட்டம் காணுவதாக அவை சொல்கின்றன‌

ஆனால் அமெரிக்க கருவூலதுறை இதை மறுத்திருக்கின்றது, இப்படி சொல்லியிருக்கின்றது

“நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது, அரசு பொருளாதாரத்தை மேலதிகமாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது, விரைவில் பொருளாதாரம் நல்ல உயரத்தை எட்டும்”

இது எங்கோ கேட்ட வார்த்தைகள் போல இருக்கின்றதல்லவா? வேறு எங்கே இந்திய நிதித்துறை சொன்ன அதே வார்த்தைகள்

ஆக அமெரிக்காவுக்கே வழிகாட்டுகின்றது இந்தியா

எப்படிஎல்லாம் இந்தியாவினை உளவு பார்க்கின்றது அமெரிக்கா என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்