இவருக்கு அவர்கள் “மருது சகோதரர்களாக” தெரியட்டும்

Image may contain: 1 person, text

இவருக்கு அவர்கள் “மருது சகோதரர்களாக” தெரியட்டும்

ஆனால் மோடி எனும் எஜமானுக்கு வண்டி இழுக்கும் “எருது சகோதரர்களாக”த்தான் தமிழகம் ஓபிஎஸ் இபிஎஸ் என்பவர்களை பார்த்துகொண்டிருக்கின்றது

 


சேலம் 8 வழிச்சாலை குறித்து News7 தொலைக்காட்சியில் பல விஷயங்களை ஒளிபரப்புகின்றார்களாம், விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றார்களாம்

ஆனால் தேரிகாட்டு கடற்கரையில் அனுமதியின்றி வைகுண்டராஜன் கும்பல் தனி சாலைகள் அமைத்து கனிம வளங்களை சுரண்டிய காட்சிகள் இன்றும் உண்டு

அந்த சாலைகள் பற்றி எல்லாம் News7 பேசுமா என்றால் பேசவே பேசாது..


 காவல் நிலையம், நீதிமன்றம் இன்னபிற அரசு சேவைகள் பற்றி புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும் :சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அப்படி நம்பர் அறிவித்தால் முதல் போன் ஸ்டாலின் தான் செய்வார் என்பது வேறுவிஷயம்

முதலில் திமுக மீதான புகார்களுக்கு ஸ்டாலின் இலவச தொலைபேசி எண் அறிவித்திருகின்றாரா என தமிழிசை விரைவில் கேட்பார் என எதிர்பார்ப்போம்..