இவர்களுக்குத்தான் கனத்த லாபம்

இந்த ஐ.எஸ் அமைப்பு இருக்கின்றதே அது எங்கெல்லாம் அமெரிக்காவும் இஸ்ரேலும் காலுன்ற வேண்டுமோ அங்கு முதலில் சென்று நிலமையினை கலைத்துவிடும் வேட்டை நாய்

சதாம் இல்லா ஈராக்கில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? என குரல்கள் கேட்க தொடங்கியபொழுது ஐ.எஸ் ஈராக்கை நொறுக்கியது, இதோ நாங்கள் தேவை என அமெரிக்கா அங்கே நின்றுவிட்டது

சிரியாவில் அமெரிக்கா செல்லவேண்டிய அவசியம் வந்தபொழுது அங்கும் முதலில் குழப்பியது ஐ.எஸ்

இப்பொழுது இலங்கையிலும் அமெரிக்கா கால் ஊன்ற வழிகாட்டியிருக்கின்றது ஐ.எஸ்

ஆம் அமெரிக்கா இரண்டு காலையும் வைக்க, இஸ்ரேலோ தன் நாட்டில் இலங்கைகு மாபெரும் அஞ்சலி செலுத்திவிட்டு ஓடோடி வருகின்றது

பாலஸ்தீனத்தில் அனுதினமும் குண்டு வீசும் அதே இஸ்ரேல்

ஆக கூட்டி கழித்து பார்த்தால் ஐ.எஸ் என்பது யாருக்கான அமைப்பு என்பது எல்லோருக்கும் தெரியவரும்

அமெரிக்கா இஸ்ரேல் இலங்கை என கத்தும் நபர்கள் ஒரு நாட்டை மட்டும் கள்ளதனமாக மறைக்கின்றனர்

அது சவுதி அரேபியா

இந்த இறுக்கமான வஹாபியிசத்துக்கு அதுதான் தாய்பூமி அங்கிருந்துதான் இந்த கொடூர இயக்கம் வளர புட்டிபாலும் கொடுக்கபடுகின்றது

பல காரணங்களுக்காக சவுதி பணம் இலங்கைக்கு வந்தது கூடவே இந்த கொடிய விஷயங்களும் வந்தன‌

அரளியினை விதைத்துவிட்டு திராட்சையினை எதிர்பார்த்தால் எப்படி

கிட்டதட்ட உலகம் சொல்லும் முடிவு இதுதான்

அமெரிக்கா இஸ்ரேல் சவுதி இவற்றின் வேட்டைநாய்தான் ஐ.எஸ்

ஆனால் மிக சமார்த்தியமாக மறைகின்றார்கள்

ஐ.எஸ் அமைப்பின் ஒவ்வொரு தாக்குதலிலும் இவர்களுக்குத்தான் கனத்த லாபம்