இவர்கள் சுயத்தை வெளிகாட்டுவதில் என்ன தயக்கம்?
தமிழக முதல்வர்களில் கல்வி இல்லாதவர்கள் காமராஜரும் , ராமசந்திரனும்
காமராஜர் தனக்கு இயல்பான பேச்சு எதுவோ அதை எல்லா இடத்திலும் பேசினார், கட்சி கூட்டம் அரசியல் மேடை, சட்ட சபை என எங்கும் அவராகவே இருந்தார்
“ஆமாண்ணேன், எனக்கு அடுக்கு மொழி வராதுண்ணேன், நான் அரசியல்ல இருக்கிறது அடுக்கு மொழி பேச இல்லண்ணேன், நாட்டுக்கு செய்றதுக்கு ஆயிரம் இருக்குண்ணேண்” என அவரின் பாமர மொழியிலே அவர் பேசினார்
தொண்டையில் குண்டு வாங்கி பேச்சுசரிவரா நிலையிலும் தன் இயல்பான பேச்சிலே இருந்தார் ராம்சந்திரன்
இப்பொழுது இருக்கும் முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் அதை உணர்தல் நலம்
அதனதன் இயல்பில் இருத்தல் எல்லாவற்றுக்கும் அழகு , பூனை புலி போல் கர்ஜிக்க முடியாது. காகம் குயில் போல் பாடம் முடியாது
அப்படி அவர்கள் இயல்பிலே இருந்தால் அவமானபடமாட்டார்கள்
பழனிச்சாமி ஜெயலலிதாவாக முயன்று மொக்கை வாங்குகின்றார், ஸ்டாலின் தன்னை கருணாநிதியாக எண்ணிகொண்டு குழப்பி அடிக்கின்றார்
இவர்கள் சுயத்தை வெளிகாட்டுவதில் என்ன தயக்கம், அந்த உண்மை தன்மை கூட இல்லாதவர்களிடம் என்ன சிந்தனையோ தனி தன்மையோ இருந்துவிட முடியும்?s