இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்?

இந்த நபர் யாரென தெரியவில்லை ஆனால் மனிதர் வெற்றிமாறனின் ரசிகர் போலிருக்கின்றது, முருகதாஸ் போன்றோர் இவரை பயன்படுத்தலாம்

இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்? திமுகவினரிடம் கேட்டால் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருக்க்கும் ஷாப்பிங் காம்ளக்ஸை இவர் பெயரில் கொடுத்துவிட்டார் என சிரிக்காமல் சொல்லியிருப்பார்கள் விஷயம் முடிந்திருக்கும்

நாம் நம்மை பற்றி அதாவது நம் நிலைபாட்டினை பற்றி பல இடங்களில் சொல்லியாயிற்று

நாம் ஒன்றும் 92 வயது அனுபவசாலி அல்ல, அரசியலிலோ இல்லை கட்சி நிலைப்பாட்டிலோ இருந்ததுமில்லை. ஒரு இந்தியன் எனும் உணர்வு எல்லோரையும் போல எமக்கும் இருந்தது

வாசிப்பு என்பது 1ம் வகுப்பில் தொடங்கிய வழக்கம், அதில் நிறைய மறக்கவில்லை என்பது என் சாபம்

2010ல்தான் எமக்கு முகநூல் அறிமுகமானது, பிஷ்வேலி பார்ம்வேலி ஆடிகொண்டிருந்தேன், 2012 வரை அதை மட்டும்தான் கண்ணும் கருத்துமாய் செய்தேன்

2012ல் சீமானின் அட்டகாசம் அதிகமாயிருந்தது, தும்பிகளின் இம்சை ஓவராய் இருந்தது. அப்பொழுதுதான் உலக நிலவரத்தையும் சைமனின் பொய்யினையும் சொன்னோம்

அதுவும் இந்தியா ஈழமக்களுக்கு செய்த நன்மைகளை புலிகளை வளர்த்து அவர்கள் கையாலே செத்ததையும் , கடைசி யுத்தத்துக்கும் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் சம்பந்தமில்லை என சொன்னோம்

எம் தேசத்தினை பற்றி நான் சொல்ல யாரிடம் கேட்க வேண்டும்

அப்பொழுது புலிகள் தியாகிகள், பிரபாகரன் தியாகி எனும் நிலை, அவர்களை பற்றி பேசினால் அடிக்க வருவார்கள் , வெளிநாடென்றால் கொல்வார்கள்

குஷ்பு துணிச்சலாக புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என சொல்லி வாங்கி கட்டினார், நாம் அவரை தலைவியாக ஏற்றது அப்பொழுதுதான்

ஈழபோரில் இந்தியாவின் நியாயத்தை சொன்னோம்

இங்குதான் திமுகவினர் ஒட்டினார்கள், அந்த பழக்கம் திமுகவில் சில தொடர்புகளை கொடுத்தது, அப்படியே கருணாநிதி எனும் பழுத்த அரசியல்வாதியினை சந்திக்க வைத்தது. இதெல்லாம் யார் மறுக்க முடியும்?

நான் பிறந்தவுடன் கையில் கொடிபிடித்து திமுகவுக்கு வந்தவனுமல்ல, 18 வயதிலே அவர்களால் அமைச்சரானவனும் அல்ல‌

இந்த எழுத்து இருக்கின்றது அல்லவா? அது சிரங்கு போன்றது, ஒட்டிவிட்டால் போகாது

இப்படியாக எதையாவது எழுதிகொண்டும் வாசித்து கொண்டும் இருந்தபொழுதுதான் சிந்தனை மாறிற்று

நான் மறுபடி சொல்கின்றேன், நாம் திமுக அனுதாபி அல்ல கருணாநிதியின் வயதும் தமிழும் அந்த வயதுகேற்ற மரியாதையும் வணங்க கூடியதே

சிந்தனை மாற மாற தெளிவும் வந்தது, உலக நாடுகள் இந்திய ஒப்பீடு அண்டை மாநில தமிழக ஒப்பீடு, வரலாறு என வாசித்ததில் தெளிவு பிறந்தது இது அரசியல்

ஆன்மீக கதை வேறுமாதிரியானது, அதை சொன்னால் ஒரு பயலுக்கும் புரியாது. அதெல்லாம் சொந்த அனுபவம், சொன்னால் ஆதாரம் கேட்பான், அதற்கு எங்கே செல்வது, அனுமன் போல் நெஞ்சினை கிழிக்க முடியாது

இந்துமதம் தத்துவார்த்தமும் அறிவியலும் மனவியலும் இன்னும் பல சிறப்புக்களை கொண்டது என்பது மெதுவாகத்தான் புரிந்தது

அதை நாம் மறைக்கவில்லை, இந்துமதம் என்பது சாத்தானின் வழி என்றுதான் எமக்கு போதிக்கபட்டது

ஆனால் சாத்தான் வேறு இந்துமதம் வேறு என்பது மெல்லத்தான் விளங்கிற்று

கிறிஸ்தவம் நல்லமதமே ஆனால் அது உலகாளும் அரசியலின் பகுதியாய் சிக்கியது தெரிந்தது , இங்கு கிறிஸ்தவம் பெயரில் செய்யும் குழப்பமும் சதியும் மெல்ல புரிந்தது.

எம்மேல் இவர்கள் எழுப்பும் குற்றசாட்டு இவன் கிறிஸ்தவன் ஏன் திடீரென இந்துமதம் பக்கம் வருகின்றான்?

ஒரு கிறிஸ்தவன் இந்துமதத்தை அறிய கூடாதா என்ன? அம்மதம் படிக்க படிக்க ஆச்சரியமானதாய் இருக்கின்றது படிக்கின்றேன்

எனக்கும் 35+ வயது ஆகின்றது இன்னும் மிஞ்சி போனால் 35 வருடம் இருப்பேன் அவ்வளவுதான் என் வாழ்க்கை

இந்த 35 வருட காலம் கிறிஸ்துவத்தினை மட்டும் படித்தாயிற்று கொஞ்ச காலம் புத்தமதத்தை படித்தேன் இப்பொழுது இந்துமதத்தை நோக்கி கொண்டிருக்கின்றேன்,
இஸ்லாமிய அறிஞர்களுடனும் எமக்கு நல்ல நட்பு உண்டு

அதனால்தான் இன்றுவரை இஸ்ரேலை கண்டித்து பாலஸ்தீன் பக்க நியாயத்தை சொல்கின்றோம்

மலேசிய சீக்கியர்களுடன் பழகியதால் சீக்கிய மதமும் நன்கு புரியும்,

இது போக ஆப்ரிக்கன் சிலருடன் பழகியதால் ஆப்ரிக்க வூடு மந்திரமும் தெரியும், அதை வைத்து உன்னை கொல்லாலம் என்றிருகின்றென்

ஆக ஒருமனிதன் ஒரே மதத்தில் பிறந்து அதிலே சாகவேண்டும் என்பது ஒரே அறையில் வாழ்ந்து முடிந்து போக வேண்டும் என்பது போன்றது

இந்த பறவை பல வானங்களில் பறக்க விரும்பி பறக்கின்றது விட்டுவிடுங்கள்

நாம் ஒன்றை அழுத்தமாக சொல்கின்றோம்

எமக்கு இந்நாடு முக்கியம், இந்நாட்டின் கலாச்சாரம் முக்கியம். கறுப்பு சட்டைகள் ஒப்பாரி வைப்பது போல பிராமணியம் ஆபத்தானது அல்ல அது இந்துமதத்தை தாங்குகின்றது இந்துமதம் தேசத்தை தாங்குகின்றது

நமக்கு கட்சி அபிமானம் என எதுவுமில்லை, ஆனால் மோடி தனிமனிதனாக குடும்பமின்றி சொந்தமின்றி நாட்டுக்காக உழைக்கின்றார் அதை நீங்கள் மறுக்கமுடியாது

நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவரென்பதால் இந்துக்களை அல்ல எந்த மத நம்பிக்கையினை பழித்தாலும் அனுமதிக்கபோவதில்லை இதெல்லாம் அவரவர் நம்பிக்கை

நாட்டில் சமூக அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் எதெல்லாம் எதிரியோ அதை சொல்லிகொண்டே இருப்ப்போம்

இந்த நபர் யாரென தெரியவில்லை, எம்மிடம் எல்லோரும் கவனமாய் இருக்கும்படி சொல்லிவிட்டார்

அன்பரே, நாம் யாரையும் கையினை பிடித்து இங்கு அமரவைக்கவில்லை, விலகி போகின்றவர்களை தேடுவதுமில்லை

எம் நெஞ்சுக்கு சரி என படுவதை சொல்வோம், விரும்புகின்றவர்கள் வருவார்கள் பிடிக்காதோர் செல்வார்கள், அவ்வளவுதான் விஷயம்

ஆனாலும் இவ்வளவும் சொல்லிவிட்டு தலைவி குஷ்பு இவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம் என சொல்லாமல் விட்டுவிட்டீர் அல்லவா?

அது ஒன்றில்தான் எம்மை புரிந்திருக்கின்றீர்

ஒரு கிறிஸ்தவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என அவர்களாக முடிவு செய்து, இவன் இப்படித்தான் என அவர்களாக முடிவு செய்து அலறிகொண்டிருக்கின்றார்கள்

எம்மை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது, ஏன் என்னாலே என்னை புரிந்து கொள்ளமுடியாது

எம் மனம் என்ன சொல்கின்றதோ, மனதின் குரல் என்ன சொல்லுமோ அதை அப்படியே எழுதி வைப்போம், இதற்கு மேல் சொல்ல அவசியமில்லை

இந்த பைத்தியகாரன் கொழும்பு தாக்குதலுக்கு பின்புதான் நம்மை கவனித்திருக்கின்றான்

அதற்கு முன்பு புல்வாமா தாக்குதல், கருப்புபண ஒழிப்பு, ரபேல் விவகாரம் என பல நியாமான விஷயங்களுக்கு நாம் துணை நின்றதெல்லாம் இவனுக்கு தெரியாது போல‌

அடேய் அரைமண்டையா நீ யாரென எனக்கு தெரியாது

இதோபார், நான் ஒரு இந்தியன் அவ்வளவுதான் விஷயம்

எனக்கு இந்து ஆதரவு வேண்டும் இஸ்லாமியரை ஒழிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை, அப்படி இருந்தால் இப்படி இருக்க மாட்டோம்

நாம் ஒரு இந்தியனாக சொல்லிகொண்டே இருப்போம், இந்நாடு பெரும்பான்மை இந்துமக்கள் நாடென்பதால் அது இந்து நாடே, ஆனால் எல்லா மதத்தாரும் முழு உரிமையுடன் வாழ வாய்ப்புள்ள நாடு

எம் சிந்தனையும் அணுகுமுறையும் வித்தியாசமானது உனக்கு புரியாது, அதை உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை

கடைசியாக உனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிகொள்கின்றேன்

நாம் நம் மனதை பாதிக்கும் விஷயங்களை எழுதுவோம், எதையாவது கிளறுவோம் அதில் மண் கல் இரும்பு தங்கம் என எதாவது வரும் , சிலநேரம் ஒன்றும் வராது

அவரவருக்கு தேவையானதை அவரவர் எடுக்கின்றார்கள், உனக்கும் தேவை என்றால் எடு இல்லாவிட்டால் இடத்தை காலிசெய்

இன்னும் என்னை சீண்டிகொண்டிருந்தால் டான் நெல்லைகண்ணன் வெளிவந்ததும் அவரிடம் உன்னை சோலி முடிக்க சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை