இஸ்ரேல் செல்லுகின்றார் பழனிச்சாமி
இஸ்ரேல் செல்லுகின்றார் பழனிச்சாமி
அவர் இன்று இருந்திருந்தால் பழனிச்சாமி முதல்வரே இல்லை, மீறி இருந்திருந்தால் கலைஞர் இப்படித்தான் எழுதுவார்
“நான் எல்லா நூலையும் போல பரமன் இயேசுவின் பைபிளையும் பலமுறை படித்திருக்கின்றேன், நான் சிலுவை அணியாத கிறிஸ்தவன் என்பது எஸ்ரா சற்குணம் பால் தினகரன் போன்றவருக்கு தெரியும்
அன்றும் இன்றும் இஸ்ரேலாக அறியபடும் அந்த தேசத்திலே எத்தனையோ புரட்சியாளர்கள், நலமனமிக்கோர், ஏழையின் கண்ணீர் துடைத்த ஏந்தல்கள் எல்லாம் ஏசு போல் நடமாடியிருகின்றார்கள்
ஆனால் அதே மண்ணில்தான் யூதாசும் நடமாடியிருக்கின்றான், பரபாசும் நடமாடியிருக்கின்றான் , இயேசுவோடு செத்த இரு திருடர்களும் நடமாடியிருகின்றார்கள்
ஆக துரோகிகளும் திருடர்களும் நடமாடுவது இஸ்ரேலுக்கு ஒன்றும் புதிதே அல்ல, அல்ல”