இஸ்ரேல் தன் கடும் கோபத்துடன் மூர்க்கமான ஆவேசத்துடன் இறங்கிவிட்டது
இஸ்ரேல் தன் கடும் கோபத்துடன் மூர்க்கமான ஆவேசத்துடன் இறங்கிவிட்டது, காசா பகுதியில் ஜிகாத் தலைவனை போட்டு தள்ளிவிட்டது
இஸ்ரேலுக்கு அஞ்சி தலைவர் யார் என ஜிகாத் தலமைகள் சொல்லாது, ஆனாலும் மிக துல்லியமாக உளவெடுக்கும் இஸ்ரேல் அவர்கள் தங்குமிடத்தை மிக நுணுக்கமாக அடித்து கொல்கின்றது
காசாவில் ஒரு தளபதியினை கொன்ற இஸ்ரேல், சிரியாவின் தலைநகரில் புகுந்து அடுத்த தளபதியினையும் போட்டு தள்ளியிருக்கின்றது
தகவல்களை முழுவதும் கையில் வைத்துகொண்டு , எதிரிகளின் ஜாதகமே கிடைத்தபின் அவர்களை சுதாரிக்கவிடாமல் அடி அடி என அடித்து ஒழிப்பதில் இஸ்ரேல் என்றுமே கில்லாடி
மூச்சுவிட கூட நேரம் கொடுக்காமல் அடிப்பார்கள்
இது மகா துணிச்சலான விஷயம்
சிரியாவில் ரஷ்ய ராணுவம் நிற்கும் நிலையிலும், எஸ் 400 சிஸ்டம் இருக்கும் நிலையிலும் இஸ்ரேல் இச்சாதனையினை செய்திருகின்றது
விஷயம் என்னவென்றால் ரஷ்யா எஸ் 400 சிஸ்டத்தை டி ஆக்டிவ்வேட் அதாவது இனி தேவையில்லை என ஆப் செய்திருக்கும் பொழுது, வாய்ப்புக்காக காத்திருந்த இஸ்ரேல் சிரியாவில் புகுந்து அடித்திருக்கின்றது
பதிலுக்கு இஸ்லாமிய ஜிகாத் கடும் ஏவுகனை தாக்குதலை இஸ்ரேல் மேல் தொடுத்திருக்கின்றது , தன் நாட்டில் புகுந்த ஆத்திரத்தில் சிரிய ஆதரவும் உண்டு
லெபனானின் ஹெஸ்புல்லா இந்த டமாஸ்கஸ்லில் இஸ்ரேல் புகுந்து அடித்ததில் அரண்டு போய் மறுபடியும் களமிறங்கியிருக்கின்றார்கள்
வாய்ப்புக்காய் காத்திருக்கும் ஈரானும் கள்ளசிரிப்பு சிரிக்கின்றது
சிறிய போர் தொடங்கிவிட்டது, இது வழக்கமான ஒன்று எனினும் பெரும் போராக வெடிக்கலாம், அதில் இஸ்ரேல் ஒருபக்கம் பகிரங்கமாகவும் மறுபக்கம் தீவிரவாதிகள் பின்னால் ஈரானும் சிரியாவும் இருக்கலாம்
இஸ்ரேலின் அயர்ன்டோம் சிஸ்டம் செயல்பட்டு பல ஏவுகனைகளை தடுக்கின்றது எனினும் சிலது உள்ளே வருகின்றன
இஸ்ரேல் அவசரகாலத்தை அறிவித்துவிட்டு போர்கோலம் பூண்டிருக்கின்றது, பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகின்றன, செய்தி கிடைக்க கிடைக்க தருகின்றோம்
இஸ்ரேல் டமாஸ்கஸில் என்னமாதிரி விமானத்தில் புகுந்தது என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக்
ஆம் சிரியாவின் ரஷ்ய ரேடார்களில் சிக்காமல் அவர்களின் விமானம் சென்று ஜிகாத் கமாண்டரின் வீட்டை ஏவுகனைகளால் நொறுக்கியிருக்கின்றது
அது ரேடாரில் சிக்காத விமானமா? எப் 35 ரகமா, இல்லை ரஷ்ய சிஸ்டத்திலே மண்ணை தூவிய புது ரகமா என கலங்கி நிற்கின்றது ரஷ்ய சிரிய தரப்பு

