இஸ்லாமிய உலகம் அரண்டு கிடக்க்கின்றது

இஸ்லாமிய உலகம் அரண்டு கிடக்க்கின்றது, அவரிடம் இருந்து அப்படி ஒருவார்த்தையினை யாரும் எதிர்பார்க்கவில்லை

பாலஸ்தீன் மக்களின் தலையில் இடியினை இறக்கி இருக்கின்றார் சவுதி இளவரசர்

என்ன சொல்லிவிட்டார் என்றால் இஸ்ரேலுக்கு அவர்கள் மண்ணில் முழு உரிமை உண்டு என சொல்லிவிட்டார்

ஒரு இஸ்லாமிய நாடு கூட இஸ்ரேலை அங்கீகரிக்கா நிலையில், இன்றும் ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இஸ்ரேலுக்கு தூதரகம் இல்லா நிலையில் இஸ்லாமி தாய்பூமியான சவுதியின் இந்த அறிக்கை உலகை புரட்டி போட்டிருக்கின்றது

நிச்சயம் இஸ்ரேலுக்கு இது மாபெரும் வெற்றி, அவர்கள் நடத்திய யுத்தங்களில், உளவுதுறையில் கிடைத்ததை விட மிகபெரும் வெற்றி இது, ராஜதந்திர வெற்றி

எப்படி சாதித்தது இஸ்ரேல்

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் ஈரானுக்கு எதிரான காரியங்களில் சவுதிக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து உதவி செய்தது இஸ்ரேல், சவுதி தலைநகரை குறிவைத்து ஏவும் ஈரானிய ஏமன் ஏவுகனைகளை அழிப்பதில் இஸ்ரேலிய உதவி உண்டு, ஏமனில் தீவிரவாதிகளின் முகாம்களை காட்டி கொடுக்க மொசாத் உதவி உண்டு என்கின்றன செய்திகள்

பதிலுக்கு சவுதியினை இவ்வார்த்தையினை பேசவைத்து மாபெரும் ராஜதந்திர வெற்றியினை அது பெற்றாயிற்று

சவுதி இஸ்லாமியருக்கு பெரும் துரோகம் செய்கின்றது என பின்லேடன் எச்சரித்தது சரியாயிற்று

நிச்சயம் சவுதி முழுமனதோடு சொல்லியிருக்காது , அதனை அப்படி சொல்லவைக்க சில சக்திகள் நிர்பந்தித்திருக்கலாம்

இஸ்ரேலை வீழ்த்துவது ஒன்றும் பெரிய காரியமல்ல, ஆனால் இப்படி இஸ்லாமிய நாடுகள் பிரிந்து நிற்கும்பொழுது எப்படி சாத்தியம்? எல்லாம் ஒன்றாக சேர்ந்து அடித்தால் நொடிக்கு தாங்காது இஸ்ரேல்

ஆனால் சேரமாட்டார்கள், சேர கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம்

ஆக உலகின் மிக தீவிரமான இஸ்லாமிய நாடான சவுதியே இஸ்ரேலை அங்கீகரிக்கும் அளவு பேசியிருப்பது உலகில் பெரும் சலசலப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது

இதற்கு எதிர்ப்பாக ஈரானை தவிர எந்த இஸ்லாமிய நாடும் இன்னும் வாய்திறக்கவில்லை

எனினும் மிகபெரும் தாக்கத்தை ஏற்படுத்த்தபோகும் விஷயம் இது